இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில், கடந்த மாதம் 30 ஆம் தேதி வெளியான திரைப்படம் 'பொன்னியின் செல்வன்'. விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஜெயராம், பார்த்திபன், சரத்குமார், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, சோபிதா தூளிபாலா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்கள் நடிப்பில், சுமார் இரண்டு வருட படப்பிடிப்புக்கு பின்னர் வெளியான, இந்த திரைப்படம் தமிழகத்தை ஆண்ட, சோழ மன்னர்களைப் பற்றிய கதை என்பதால், இந்த படத்தின் மீதான எதிர்பார்த்து உலக அளவில் அதிகமாகவே இருந்தது.
'பொன்னியின் செல்வன்' திரைப்படம் வெளியாகி 17 நாட்களே ஆகும் நிலையில், இந்த திரைப்படம் தமிழகத்தில் மட்டும் சுமார் 200 கோடி ரூபாய் வசூலித்த திரைப்படம் என்கிற சாதனையை படைத்துள்ளது.
அதிக பட்சமாக 800 கோடி வசூல் செய்து, முதல் இடத்தில் உள்ள 2.ஓ திரைப்படத்தின் வசூலை தற்போது டார்கெட் செய்துள்ள 'பொன்னியின் செல்வன்' இந்த சாதனையை முறியடிக்குமா? என்கிற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.