நடிகர் பிரபாஸுக்கு ஜோடியாக, 'பாகுபலி' படத்தில் நடித்ததன் மூலம் உலக அளவில் பிரபலமானவர் தமன்னா. அடுத்தடுத்து பாலிவுட் மற்றும் கோலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வரும் இவர், பிரபாஸின் விருந்தோம்பல் குறித்து நேர்காணல் ஒன்றில் கூறி அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளார்.
காந்தம் போன்ற மாயஜால வித்தையைக் காண்பது போலிருக்கும். இது அவர் விருந்தினர் மீது வைத்திருக்கும் அதீத அன்பை வெளிப்படுத்துகிறது. எளிமையான உதாரணத்துடன் சொல்ல வேண்டும் என்றால், நாட்டை ஆளும் மகாராஜாவிற்கு இணையானவராக பிரபாசை சொல்லலாம். அவரின் விருந்தோம்பல், மற்றவர்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தும்.
இதனிடையே நடிகை தமன்னா மட்டுமல்ல.. நடிகைகள் பூஜா ஹெக்டே, ஸ்ரத்தா கபூர், ஸ்ருதிஹாசன், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் என ஏராளமான முன்னணி நட்சத்திரங்கள் பிரபாசின் மாயஜால விருந்தோம்பலில் நனைந்து, அவரைப் பற்றி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.