செருப்பாலயே அடிப்பேன்... கணவரை விமர்சனம் செய்த நெட்டிசனுக்கு புஷ்பா நடிகை கொடுத்த பளார் ரிப்ளை

Published : Feb 17, 2023, 03:24 PM IST

அல்லு அர்ஜுனின் புஷ்பா படத்தில் வில்லியாக நடித்த நடிகை சமூக வலைதளத்தில் நெட்டிசன்களுடன் மோதலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

PREV
14
செருப்பாலயே அடிப்பேன்... கணவரை விமர்சனம் செய்த நெட்டிசனுக்கு புஷ்பா நடிகை கொடுத்த பளார் ரிப்ளை

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அனசுயா பரத்வாஜ். சின்னத்திரையில் தொகுப்பாளினியாக தனது பயணத்தை தொடங்கிய அனசுயா, அதன்பின் படங்களில் நடிக்கத் தொடங்கினார். அந்த வகையில் சுகுமார் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன ரங்கஸ்தலம் படத்தில் அனசுயாவின் நடிப்புக்கு பாராட்டுக்கள் கிடைத்தது. இதையடுத்து அல்லு அர்ஜுனின் புஷ்பா படத்திலும் வில்லன் சுனிலின் மனைவியாக நடித்திருந்தார் அனசுயா.

24

இப்படி தொடர்ந்து துணிச்சலான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் அனசுயாவுக்கு சமூக வலைதளங்களிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அவர்களைக் கவரும் விதமாக கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி அதில் பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார் அனசுயா. இதுதவிர அடிக்கடி அவர் நெட்டிசன்களுடன் மோதலில் ஈடுபடும் சம்பவங்களும் நடக்கும். கடந்தாண்டு ஒருவர் தன்னை ஆண்டி என அழைத்ததால் கடுப்பான அனசுயா, கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து ஆண்டி என்கிற ஹேஷ்டேக்கை டிரெண்டாக்கி வம்பிழுத்த நெட்டிசன்கள் மீது சைபர் கிரைம் போலீசிடமும் புகார் அளித்தார்.

இதையும் படியுங்கள்... ஒரே நாளில் 2 ஓடிடி தளங்களில் ரிலீசாகும் வாரிசு... அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட படக்குழு

34

இந்த சம்பவத்துக்கு பின் சோசியல் மீடியாவில் இருந்து சற்று ஒதுங்கியே இருந்து வந்த அனசுயா, காதலர் தினத்தன்று தனது கணவருடன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு இருந்தார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் பல்வேறு கமெண்ட்டுகளை பதிவிட்டு வந்தனர். குறிப்பாக அதில் ஒரு நெட்டிசன், அனசுயா பணத்திற்கு ஆசைப்பட்டு தான் பரத்வாஜை திருமணம் செய்துகொண்டதாக கமெண்ட் செய்திருந்தார். இந்த தரக்குறைவான கமெண்ட்டை பார்த்து கடுப்பான அனசுயா அந்த நெட்டிசனை வெளுத்து வாங்கியுள்ளார்.

44

இதற்கு பதிலடி கொடுத்த அனசுயா, “பணத்தை தாண்டி சிந்திக்க கற்றுக்கொள். ஏன் அவரிடம் தான் பணம் இருக்கிறதா? என்னிடம் இல்லையா? கன்னத்துல போட்டுக்கோ... இல்லேனா உன் கன்னத்தில் செருப்பாலயே அடிப்பேன்” என்று எச்சரித்திருந்தார். இதற்கும் அடங்காத நெட்டிசன், நீங்கள் எவ்வளவு சொன்னாலும் அதுதான் உண்மை என பதில் கமெண்ட் அடிக்க, கோபத்தின் உச்சத்துக்கு சென்ற அனசுயா, “மஞ்ச காமாலை வந்தவனுக்கு உலகமே மஞ்சளாதான் தெரியுமாம். உன் புத்தி பணத்து மேல தான் இருக்கு. எல்லாரும் உன்னை மாதிரி இருக்க மாட்டார்கள். தயசு செஞ்சு மாறு” என பதிலடி கொடுத்தார். அனசுயா நெட்டிசனுடன் மோதலில் ஈடுபட்ட சம்பவம் தெலுங்கு திரையுலகில் பேசுபொருள் ஆகி உள்ளது.

இதையும் படியுங்கள்... பிரபல நடிகரை வைத்து... முன்னாள் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கு செக் வைக்கும் தனுஷ்! நிலவும் கடும் போட்டி!

click me!

Recommended Stories