தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்த திரைப்படம் வாரிசு. கடந்த மாதம் பொங்கல் விருந்தாக திரைக்கு வந்த இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் பேமிலி ஆடியன்ஸை கவரும் வகையில் இப்படம் அமைந்து இருந்ததால் வசூலையும் வாரிக்குவித்தது. இப்படம் தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் வாரசுடு என்கிற பெயரில் ரிலீஸ் ஆனது. இருமொழிகளிலும் அமோக வரவேற்பை பெற்ற இப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் வசூல் சாதனை நிகழ்த்தியது.
24
அதன்படி வாரிசு திரைப்படம் மொத்தமாக ரூ.310 கோடிக்கு மேல் வசூலித்து உள்ளது. நடிகர் விஜய்யின் கெரியரில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்கிற சாதனையையும் இப்படம் நிகழ்த்தியது. இதற்கு பிகில் படம் ரூ.306 கோடி வசூலித்ததே சாதனையாக இருந்த நிலையில் வாரிசு திரைப்படம் அதனை முறியடித்து நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளது. வாரிசு படத்தின் பிரம்மாண்ட வெற்றியை நடிகர் விஜய்யும் படக்குழுவினரோடு சேர்ந்து கொண்டாடினார்.
இந்நிலையில், வாரிசு திரைப்படம் ஓடிடி ரிலீசுக்கு தயாராகி உள்ளது. வழக்கமாக படம் ரிலீசாகி 28 நாட்களிலேயே படம் ஓடிடியில் ரிலீஸ் ஆகிவிடும். ஆனால் வாரிசு படத்துக்கு மக்களின் ஆதரவு தொடர்ந்து கிடைத்து வந்ததால், அப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை வெளியிடாமல் இருந்து வந்தனர். இந்நிலையில், அப்படம் வருகிற பிப்ரவரி 22-ந் தேதி ஓடிடியில் ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
44
அதுவும் இப்படம் இரண்டு ஓடிடி தளங்களில் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி வருகிற பிப்ரவரி 22-ந் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ரிலீசாகும் என்றும். இந்தியா தவிர்த்து வெளிநாடுகளில் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் இப்படம் ரிலீசாகும் என அறிவித்துள்ளனர். இப்படம் ஓடிடியில் என்னென்ன சாதனைகளை நிகழ்த்தப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.