யாருக்கும் தெரியாமல் சிவகார்த்திகேயன் செய்த உதவிகள்... லிஸ்ட் போட்டு சொல்லி பிறந்தநாள் வாழ்த்து சொன்ன பிரபலம்

Published : Feb 17, 2023, 01:39 PM IST

நடிகர் சிவகார்த்திகேயன் இதுவரை செய்துள்ள உதவிகள் என்னென்ன என்பதை விவரமாக சொல்லி பிரபல இயக்குனர் ஒருவர் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

PREV
15
யாருக்கும் தெரியாமல் சிவகார்த்திகேயன் செய்த உதவிகள்... லிஸ்ட் போட்டு சொல்லி பிறந்தநாள் வாழ்த்து சொன்ன பிரபலம்

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்துகொண்டிருக்கும் சிவகார்த்திகேயன் இன்று தனது 38-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ஏராளமான பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழில் நரேன் நடித்த கத்துக்குட்டி மற்றும் ஜோதிகாவின் உடன்பிறப்பே போன்ற திரைப்படங்களை இயக்கிய இரா.சரவணன் சிவகார்த்திகேயன் செய்துள்ள உதவிகளை பட்டியலிட்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

25

இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ளதாவது : “சினிமா சம்பந்தப்பட்ட ஓர் ஆளுமைக்கு திடீர் நெஞ்சு வலி. அப்பல்லோவில் அட்மிட். அறுவை சிகிச்சைக்குப் பணம் தேவை. அவர் பணியாற்றும் நிறுவனத்தினர் ஒருபுறம் போராட, நண்பர்கள் நாங்களும் திண்டாடினோம். அ.வினோத் ஒரு லட்சம் கொடுத்தார். மற்றவர்களும் கொடுத்தார்கள். ஆனாலும், திரட்டிய தொகை போதவில்லை. “சார், நடிகர் சிவகார்த்திகேயனிடம் கேட்டுப் பார்க்குறீங்களா?” என என்னிடம் ஒருவர் சொல்ல, நான் சட்டென மறுத்துவிட்டேன். 

35

காரணம், நான் சிவாவிடம் நிறைய கேட்டுவிட்டேன். அவரும் மறுக்காமல் செய்துகொண்டே இருக்கிறார். முடியாது என அவர் சொன்னதே இல்லை. அதற்காக எல்லாவற்றுக்கும் அவரிடம் போய் நிற்பது எனக்கு நியாயமாகப்படவில்லை. இரண்டு நாட்கள் கழித்தும் போதிய தொகையைத் திரட்ட முடியாத நிலையில், வேறு வழியே இல்லை. விஷயத்தைத் தம்பி சிவகார்த்திகேயனிடம் மொத்தமாகக் கொட்டித் தீர்த்தபோது, “நான் பார்த்துக்குறேன். தொகை முழுவதையும் நான் கட்டுறேன். என் பங்களிப்பை அவரிடம் பகிர்ந்துகொள்ள வேண்டாம். எல்லோரும் சேர்ந்து அவருக்காக நிற்பதாகவே இருக்கட்டும்...” என்றார் சிவா. 

45

சட்டென ஒரே ஒரு போனில் மொத்த பாரத்தையும் கைமாற்றிக்கொண்ட தம்பி சிவாவின் அன்பு கோடி பெறும். “திரட்டிய தொகை கையில் இருக்கிறது. தேவைப்படும் தொகையை மட்டும் மருத்துவமனைக்குக் கொடுத்தால் போதும் தம்பி...” என வற்புறுத்திச் சொன்னேன். “அவர் ரொம்ப முக்கியமான ஆள். பேசுறப்ப அவ்வளவு எனர்ஜி கொடுக்கிற மனிதர். ஹாஸ்பிடலில் பேசி அவருக்குத் தேவையான எல்லாவற்றையும் செஞ்சு கொடுங்க...” என தம்பி நவநீதனை பணித்து, சிவா காட்டிய அக்கறை அந்த உதவியைவிட மேலானது. 

சிகிச்சையில் இருக்கும் அந்த ஆளுமையிடம் சிவாவின் வார்த்தைகளை அப்படியே சொன்னேன். குலுங்கி அழத் தொடங்கிவிட்டார். “என்னை இந்தளவுக்கு நினைவு வைச்சிருக்காரே...” என நெகிழ்ந்து போனார். சிவகார்த்திகேயன் போன்றவர்கள் உற்ற துணையாக நிற்பதுதான் அவருக்குப் பெரிய ஆறுதல். நெல் ஜெயராமன் தொடங்கி நீட் பயிற்சிக்குப் போராடிய பூக்கொல்லை சகானா வரை எத்தனையோ பேருக்கு சிவகார்த்திகேயன் உதவி இருக்கிறார். 

இதையும் படியுங்கள்... சிவகார்த்திகேயன் பர்த்டே ஸ்பெஷல்... மாவீரன் படக்குழு வெளியிட்ட மரணமாஸ் பாடல் - வைரலாகும் வீடியோ

55

பேருக்கு உதவினோம் என்றில்லாமல், தொடர்ந்து அவர்கள் குறித்து விசாரிப்பதும் மேற்கொண்டு உதவுவதுமாக சிவா காட்டும் அக்கறை உண்மையானது; பரிபூரணமானது. நெல் ஜெயராமன் மகனின் படிப்பு செலவை இன்றளவும் ஏற்று வருகிறார் சிவா. இன்னும் பட்டியலிட நிறைய இருக்கின்றன. எதையும் பெரிதாகக் காட்டிக்கொள்ளாமல் எல்லாமும் செய்யும் அன்புத்தம்பி சிவகார்த்திகேயன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள். ஒருவருடைய வெற்றியும் சம்பாத்தியமும் அவருக்கும் அவர் குடும்பத்துக்காகவும் மட்டுமே அல்லாமல், பலருக்குமான பலனாக அமைவது பெரிய சிறப்பு. அந்த வகையில் தம்பி சிவகார்த்திகேயன் எல்லோருக்குமான நம்பிக்கை!” என குறிப்பிட்டுள்ளார் இயக்குனர் இரா.சரவணன்.

இதையும் படியுங்கள்... ஜெயிலரில் தரமான சம்பவம் செய்ய தயாரான சிவகார்த்திகேயன்! ரஜினி தந்த திடீர் வாய்ப்பால் திக்குமுக்காடிபோன எஸ்.கே.!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories