தனுஷ் ‘வாத்தி’யாக பாஸ் ஆனாரா? பெயில் ஆனாரா? - வாத்தி படத்தின் விமர்சனம் இதோ

First Published | Feb 17, 2023, 11:44 AM IST

வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ், சம்யுக்தா, சமுத்திரக்கனி, கென் கருணாஸ் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் வாத்தி படத்தின் டுவிட்டர் விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

தனுஷ் நடித்துள்ள திரைப்படம் வாத்தி. வெங்கி அட்லூரி இயக்கியுள்ள இப்படம் தமிழில் வாத்தி என்கிற பெயரிலும், தெலுங்கில் சார் என்கிற பெயரிலும் தயாராகி உள்ளது. இப்படத்தை சித்தாரா நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா நடித்துள்ளார். இப்படம் மூலம் டோலிவுட்டில் ஹீரோவாக எண்ட்ரி கொடுத்து உள்ளார் தனுஷ். இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்து இருக்கிறார்.

வாத்தி திரைப்படத்தில் நடிகர் தனுஷ் கணக்கு வாத்தியாராக நடித்து இருக்கிறார். இப்படம் இன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி உள்ளது. தமிழகத்தில் இப்படத்தை செவன் ஸ்கிரீன் நிறுவனம் ரிலீஸ் செய்துள்ளது. வாத்தி திரைப்படம் பார்த்த ரசிகர்கள் தங்களது விமர்சனத்தை டுவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் வாத்தி படத்தின் டுவிட்டர் விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Tap to resize

வாத்தி படம் பார்த்த நெட்டிசன் பதிவிட்டுள்ளதாவது : “வாத்தி படத்தில் தனுஷ் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தான் ஒரு சிறந்த நடிகர் என்பதை நிரூபித்துள்ளார். எமோஷனல் காட்சிகள் நன்றாக கனெக்ட் ஆகின்றன. ஜிவி பிரகாஷின் பின்னணி இசை காட்சிகளுக்கு வலு சேர்த்துள்ளன. வெங்கி அட்லூரியின் நேர்த்தியான படமாக இது இல்லை” என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்... ஜெயிலரில் தரமான சம்பவம் செய்ய தயாரான சிவகார்த்திகேயன்! ரஜினி தந்த திடீர் வாய்ப்பால் திக்குமுக்காடிபோன எஸ்.கே.!

மற்றொரு நெட்டிசன் போட்டுள்ள டுவிட்டில், “தனுஷின் மற்றுமொரு ஃபீல் குட் படமாக வாத்தி அமைந்துள்ளது. நிறைய எமோஷன்களும், புல்லரிக்க வைக்கும் தருணங்களும் படத்தில் உள்ளன. தனுஷின் நட்ப்பு வேறலெவல். பிஜிஎம், டயலாக் எல்லாம் பின்னிட்டாங்க. நிச்சயம் இது ஒரு ஹிட் மெட்டீரியலாக இருக்கும்” என பதிவிட்டுள்ளார்.

இன்னொரு பதிவில், “வாத்தி ஓரளவு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய படமாக உள்ளது. இரண்டு பாதிகளின் இறுதியிலும் நல்ல காட்சிகள் இருந்தாலும், அது நம்பத்தகாத ஒன்றாக உள்ளது. படம் பாதி தமிழிலும் பாதி தெலுங்கிலும் எடுத்துள்ளார்கள். தனுஷுக்கு கேக்வாக் ரோல் இது. சம்யுக்தா மற்றும் கென் கருணாஸின் நடிப்பும் சூப்பர். ஜிவி பிரகாஷின் இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. மொத்தத்தில் இது ஒரு ஆவரேஜ் ஆன படம் தான்” என குறிப்பிட்டுள்ளார்.

மற்றோரு நெட்டிசன் போட்டுள்ள பதிவில், “வாத்தி டப்பிங் படம் போன்ற உணர்வை தருகிறது. சொல்ல வர விஷயம் ஓகே ஆனால் சொன்ன விதம்.. ஒன்னும் சொல்றதுக்கு இல்ல. முதல் பாதி சுமார். அங்கங்க 2 சீன் நல்லா இருக்கு” என பதிவிட்டு இருக்கிறார்.

படம் பார்த்த நெட்டிசன் போட்டுள்ள டுவிட்டில், “ரசிகர்களை ஊக்குவிக்கும் படங்களின் பட்டியலில் வாத்தி இணையும். வழக்கம் போல தனுஷ் மாஸ் காட்டி உள்ளார். திரைக்கதைக்காகவே இயக்குனர் வெங்கி அட்லூரிக்கு பாராட்டுக்கள். ஜிவி பிரகாஷ் பின்னணி இசை சிறப்பு. சமுத்திரக்கனி, சம்யுக்தா, கென் ஆகியோர் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்துள்ளார்கள். மொத்ததில் வாத்தி செஞ்சுரி அடித்துள்ளார்” என பதிவிட்டுள்ளார்.

மேற்கண்ட விமர்சனங்களை பார்க்கும்போது வாத்தி படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்து வருகிறது. இதனால் இப்படம் எந்த அளவு வசூலைக் குவிக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

இதையும் படியுங்கள்... அஜித் கைவிட்டாலும்... விக்னேஷ் சிவனை கைவிடாத ‘விஜய்’ நடிகர்..! விக்கியின் அடுத்த பட ஹீரோ இவரா?

Latest Videos

click me!