திரெளபதி படத்தின் மூலம் பரபரப்பாக பேசப்பட்டவர் இயக்குனர் மோகன் ஜி. அவர் இயக்கத்தில் இன்று வெளியாகி இருக்கும் திரைப்படம் பகாசூரன். இப்படத்தில் இயக்குனர் செல்வராகவன் நாயகனாக நடித்துள்ளார். நட்டி நட்ராஜ், ராதாரவி, கே.ராஜன், மன்சூர் அலிகான், கூல் சுரேஷ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்து உள்ளார்.
பகாசூரன் படம் பார்த்த நெட்டிசன் பதிவிட்டுள்ளதாவது : “பகாசூரன் படத்தில் செல்வராகவனின் நடிப்பு வெறித்தனமாக இருந்தது. நட்டி நட்ராஜும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். சாம் சி.எஸ். பின்னணி இசை தெறிக்க விடுது. மோகன் ஜி-யின் மேக்கிங்கும், கதையும் வேறலெவல். ஒவ்வொரு பெற்றோரும் பார்க்க வேண்டிய படம்” என குறிப்பிட்டுள்ளார்.
மற்றொரு நெட்டிசன் போட்டுள்ள டுவிட்டில், “உண்மையில் ஒரு சிறந்த படம். ஒவ்வொரு பெற்றோரும் கண்டிப்பாக இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். குறிப்பாக மகள்கள் உள்ளவர்களுக்கு.ஒரு அசிங்கமான வசனம் கூட இல்லாத படம். மற்ற இயக்குனர்கள் இவரை போலவே படம் எடுத்தால் நன்றாக இருக்கும்” என பாராட்டி உள்ளார்.
இதையும் படியுங்கள்... தனுஷ் ‘வாத்தி’யாக பாஸ் ஆனாரா? பெயில் ஆனாரா? - வாத்தி படத்தின் விமர்சனம் இதோ
இன்னொரு நெட்டிசன் பதிவிட்டுள்ளதாவது : “பகாசூரன் முதல் பாதி அருமையாகவும், இரண்டாம் பாதி நன்றாகவும் இருந்தது. செல்வராகவன் நடிப்பில் தான் ஒரு மாஸ்டர் என்பதை நிரூபித்துள்ளார். நட்டி நட்ராஜும் வழக்கம்போல அருமையாக நடித்திருக்கிறார். திரைக்கதையை திறம்பட கையாண்டு சமூகத்திற்கு தேவையான கருத்தை சொல்லியுள்ள இயக்குனர் மோகன் ஜிக்கு பாராட்டுக்கள்” என பதிவிட்டுள்ளார்.
படம் பார்த்த நெட்டிசன் போட்டுள்ள டுவிட்டில், “பகாசூரன் முற்றிலும் ஈர்க்கும் படமாகவே உள்ளது. மோகன் ஜி-யின் முந்தைய படங்களில் இருந்து இது வித்தியாசமாக உள்ளது. இந்த சமூகத்திற்கு தேவையான, அழுத்தமான மெசேஜும் படத்தின் இறுதியில் உள்ளது. செல்வராகவன் மற்றும் நட்டி நட்ராஜின் நடிப்பு அருமை” என குறிப்பிட்டுள்ளார்.
மேற்கண்ட விமர்சனங்களை பார்க்கும்போது பகாசூரன் படத்திற்கு பாசிடிவ் விமர்சனங்களே கிடைத்து வருகிறது.
இதையும் படியுங்கள்... வாத்தி படத்தை வரவேற்று பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட்டு வழங்கிய தனுஷ் ரசிகர்கள்