காமெடியில் கலக்கும் ஆர்.ஜே.பாலாஜி... திரில்லர் கதைக்கு செட் ஆனாரா? இல்லையா? - ரன் பேபி ரன் விமர்சனம்

First Published | Feb 3, 2023, 2:10 PM IST

ஜியேன் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் ஆர்.ஜே.பாலாஜி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியாகி உள்ள ரன் பேபி ரன் திரைப்படத்தின் டுவிட்டர் விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ரேடியோ ஜாக்கியாக தனது கெரியரை தொடங்கிய ஆர்.ஜே.பாலாஜி அதன்பின் பல்வேறு படங்களில் காமெடி வேடங்களில் நடித்து அசத்தினார். இதையடுத்து கிரிக்கெட் வர்ணனையாளராகவும் களமிறங்கி கலக்கிய ஆர்.ஜே.பாலாஜி, எல்.கே.ஜி படம் மூலம் ஹீரோவாகவும் அறிமுகமானார். இதையடுத்து மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷம் போன்ற படங்கள் அவர் நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்றன. இந்த இரண்டு படங்களை இயக்கியதும் அவர் தான். இதுவரை தான் இயக்கிய படங்களில் மட்டுமே ஹீரோவாக நடித்து வந்த ஆர்.ஜே.பாலாஜி, தற்போது முதன்முறையாக வேறு ஒரு இயக்குனரின் படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். அப்படத்தின் பெயர் ரன் பேபி ரன்.

எல்.கே.ஜி., மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷம் என இதுவரை காமெடி படங்களில் மட்டுமே கதாநாயகனாக நடித்து வந்த ஆர்.ஜே.பாலாஜி, தற்போது ரன் பேபி ரன் படம் மூலம் முதன்முறையாக திரில்லர் ஜானர் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை ஜியேன் கிருஷ்ணகுமார் என்கிற மலையாள இயக்குனர் இயக்கி உள்ளார். இப்படத்தில் ஆர்.ஜே.பாலாஜி உடன் ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்மிருதி வெங்கட், ராஜ் ஐயப்பா, கலக்கப்போவது யாரு பாலா, இஷா தல்வார் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்து உள்ளார். இப்படத்திற்கான டுவிட்டர் விமர்சனத்தை தற்போது பார்க்கலாம்.

Tap to resize

படம் பார்த்த நெட்டிசன் ஒருவர் பதிவிட்டுள்ளதாவது : “ரன் பேபி ரன் சுவாரஸ்யமான மற்றும் விறுவிறுப்பான மிஸ்டிரி திரில்லர் படமாக உள்ளது. திரைக்கதை வித்தியாசமாக இருந்தது. குறிப்பாக இடைவெளிக்கு முன் வரும் டுவிஸ்ட் அருமையாக இருந்தது. கிளைமாக்ஸில் தான் மர்மம் விலகுகிறது. படம் கணிக்கமுடியாத வண்ணம் உள்ளது. ஆர்.ஜே.பாலாஜியின் வித்தியாசமாக நடித்திருக்கிறார். மேக்கிங் நன்றாக உள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்... அழகான ராட்சசியே... மெல்லிய சேலையில் மெருகேறிய அழகுடன் கியூட் போஸ் கொடுத்த திரிஷா - டிரெண்டாகும் போட்டோஸ்

மற்றொரு நெட்டிசன் போட்டுள்ள டுவிட்டில், ரன் பேபி ரன் படத்தில் இப்படி ஒரு கேரக்டரை தேர்ந்தெடுத்த நடித்த ஆர்.ஜே.பாலாஜிக்கு பாராட்டுக்கள். இதற்கு முன் அவர் எப்படி நடித்து வந்தாரோ அதிலிருந்து அப்படியே வித்தியாசமாக உள்ளது. அவர் ஒவ்வொரு திரைப்படத்திலும் தனது நடிப்பை மெருகேற்றி வருகிறார். மொத்ததில் விறுவிறுப்பான திரில்லர் படமாக இது உள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல் ஆர்.ஜே.பாலாஜியின் நண்பரும், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரருமான பத்ரிநாத், ரன் பேபி ரன் படத்தின் சிறப்புக் காட்சியை தனது மனைவியுடன் சேர்ந்து பார்த்து, படம் குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அவர் கூறியதாவது : “ரன் பேபி ரன் முழுமையான திரில்லர் படமாக உள்ளது. இதுவரை பார்க்காத ஆர்.ஜே.பாலாஜிய படத்தில் பார்க்க முடிந்தது. அவரின் நடிப்பை என்ஜாய் பண்ணேன். இன்னொரு வெற்றிக்கு வாழ்த்துக்கள் ஆர்.ஜே.பாலாஜி” என பதிவிட்டுள்ளார்.

படம் பார்த்த நெட்டிசன் ஒருவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது : “ரன் பேபி ரன் சுவாரஸ்யமான திரில்லர் படம். இறுதிவரை விறுவிறுப்பாக உள்ளது. முதல் பாதி நன்றாக உள்ளது. இரண்டாம் பாதி அதைவிட சூப்பராக உள்ளது. மொத்ததில் இது ஆர்.ஜே.பாலாஜியின் ஒன் மேன் ஷோ. ஐஸ்வர்யா ராஜேஷின் கதாபாத்திரமும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. சாம் சி.எஸ். பின்னணி இசையில் தெறிக்கவிட்டுள்ளார்” என குறிப்பிட்டுள்ளார்.

மேற்கண்ட விமர்சனங்களை பார்க்கும்போது ஆர்.ஜே.பாலாஜியின் இந்த வித்தியாசமான முயற்சிக்கு வெற்றி கிட்டியது போல தெரிகிறது. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் எந்த அளவுக்கு வசூலிக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இதையும் படியுங்கள்... ஜிகுஜிகு உடையில் சிக்கென போஸ் கொடுத்து... கிளாமர் குயினாக மின்னும் பூஜா ஹெக்டே - வைரல் கிளிக்ஸ் இதோ

Latest Videos

click me!