மாஸ் பிளானுடன் ரெடியாகும் சூர்யா 42...6 நாடுகளில் படப்பிடிப்பாம்...

First Published | Oct 23, 2022, 8:34 PM IST

தற்போது வணங்கான் மற்றும் வாடிவாசல் ரெடியாகி வரும் நிலையில் சூர்யா 42 அப்டேட்  தகவல் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Suriya

விஸ்வாசம் உள்ளிட்ட படங்களின் மூலம் பிரபல இயக்குனராக மாறிய சிறுத்தை சிவா தற்போது சூர்யாவின் 42 வது படத்தை இயக்கி வருகிறார். இவர் தற்போது இயக்கும் இந்தப் படம் முதல் பகுதியை ஐரோப்பாவில் படம் ஆக்கியுள்ளது.  ஐதராபாத்தில் முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்த கட்டம்  அக்டோபர் 26 முதல் சென்னை மற்றும் புதுச்சேரியில் துவங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கிடையே சர்வதேச அளவில் இதன் படப்பிடிப்பை உருவாக்க இயக்குனர் திட்டமிட்டுள்ளார். அதற்கான ஷெட்யூலும் ரெடியாகிவிட்டதாக கூறப்படுகிறது. அதன் பின்னர் கிழக்கு நாடுகளான கம்போடியா, வியட்நாம், தாய்லாந்து மற்றும் விஜி ஆகிய நாடுகளில் படப்பிடிப்பு நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகளுக்கு...Chiyaan61 : முகத்தில் சாம்பலுடன் மாஸ் லுக்கில் விக்ரம்...சீயான் 61 பர்ஸ்ட் லுக்..

Tap to resize

suriya 42 starts filming siva studio green uv creations

இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். சூர்யாவிற்கு ஜோடியாக திஷா பதானி நடித்து வருவதாக கூறப்படுகிறது.மற்றவர்கள் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை. நீண்ட கால அட்டவணையாக இருக்க கூடும் என கூறப்படுகிறது.  நடிகர் சூர்யாவின் 42வது படத்தை ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரின் தயாரிக்கிறது. இரண்டு பாகங்களாக இந்த படம் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் உலக நாயகன் விக்ரம் கமலஹாசனின் விக்ரம் படத்தில் காமியோ ரோலில் தோன்றி ரசிகர்களை ஈர்த்திருந்தார்.. சூர்யா அதோடு சூழரைப்போற்று படத்திலும் ஹிந்தி ரீமேக்கிலும் , ராக்கெட்டரீ படத்திலும் சிறப்பு தோற்றத்தில் தோன்றி இருந்தார். தற்போது வணங்கான் மற்றும் வாடிவாசல் ரெடியாகி வரும் நிலையில் சூர்யா 42 அப்டேட்  தகவல் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகளுக்கு...அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த துணிவு...பொங்கல் ரிலீஸ் கன்பார்ம் ...

Latest Videos

click me!