என்னது ஜெயம் ரவி படம் மாதிரி இருக்கா? விஜய் தேவரகொண்டாவின் லைகர் பட விமர்சனம் இதோ !

First Published | Aug 25, 2022, 1:44 PM IST

ஆனால் படத்தை பார்த்த பலரும் நம்ம ஊரு ஜெயம் ரவி நடித்த எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படத்தின் அப்டேட் வர்க்ஷனாக இந்த படம் உள்ளது என விமர்சனம் செய்து வருகின்றனர்.

LIGER

கடந்த ஒரு மாதமாக தென்னிந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் புயலை கிளப்பி வந்த படம் தான் லைகர். விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே நடிப்பில் உருவாகியுள்ள இந்த படம் பல மாதங்களாக எதிர்பார்ப்பை கிளப்பி  வருகிறது. படத்தின் போஸ்டர்கள் மற்றும் ட்ரெய்லர் உள்ளிட்டவை படம் குறித்த ஏகபோக வரவேற்பிற்கு அச்சாணியாக அமைந்தது.

இயக்குனர் பூரி ஜெகநாத் மற்றும் இணை தயாரிப்பாளர் ஆகியோர் லைகர் வெற்றி குறித்து புரமோஷன் விழாக்களில் பெருமிதமாக கூறி வந்தனர். அதோடு விளம்பர நிகழ்ச்சிகளில் விஜய் தேவரகொண்டா மிகவும் சிம்பிளாக காட்சியளித்து ரசிகர்களின் ஆவலை மேலும் மேலும் தூண்டி வந்தார். இதனால் பிரபலங்களும் ரசிகர்களும் லைகர் படம் ஒரு பிளாக் பாஸ்டர் ஆகும் என்று கூறிவந்தனர்.

LIGER

இந்நிலையில் தான் இந்த படம் இன்று திரைக்கு வந்தது. ஆனால் படத்தை பார்த்த பலரும் நம்ம ஊரு ஜெயம் ரவி நடித்த எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படத்தின் அப்டேட் வர்க்ஷனாக உள்ளது என விமர்சனம் செய்து வருகின்றனர். அப்படி என்னதான் படத்தின் கதை என்பதை பார்க்கலாம்.

மேலும் செய்திகளுக்கு...Vijayakanth Birthday: விஜயகாந்த் நடிப்பில் வெளியாகி IMDB பட்டியலில் அதிக ராங்கிங் பெற்ற டாப் 5 படங்கள்..!

லைகர் (விஜய் தேவார கொண்டா) எம் எம் ஏ உலகில் பெரிய இடத்தைப் பிடிக்க மும்பை செல்கிறார். முன்னதாக லைகர் என நாயகனுக்கு பெயர் வைக்கப்பட்டதால் பலராலும் கேலி கிண்டலுக்கு உள்ளாகிறார். பின்னர் இவரது சண்டை திறனை கண்ட மக்கள் வாய் அடைத்துப் போகிறார்கள். இதை அடுத்து ரோனித் ராயில் இவருக்கு பயிற்சி கிடைக்கிறது. இறுதியில் லைகர் மிகப்பெரிய பிரபலமான எம் எம் ஏ வீரனாக உருவெடுக்கிறார் .

Tap to resize

LIGER

ஆனால் அவரது தாயார் பாலாமணி காதலால் திசை திரும்ப வேண்டாம் என்று எச்சரிக்கிறார். இதற்கிடையே சமூக ஊடகப் பிரபலமான அனன்யா பாண்டே லைகர் சண்டையை பார்த்து ஈர்க்கப்பட்டு அவர் மீது காதல் கொள்கிறார். இதை தாயார் கண்டிக்கிறார். இப்படி படம் செல்கிறது.

கடந்த நாட்களில் பல மறக்க முடியாத படங்களை கொடுத்த இயக்குனர் பூரி ஜெகநாத் இயக்கம் மற்றும் லைகர் உருவாக மூன்று ஆண்டுகள் எடுத்துக்கொண்டதாலும் படம் குறித்த ஏகபோக யூகங்கள் நிலவி வந்தன. ஆனால் படத்திலோ அதற்கான எந்த சுவடும் இல்லை.

ஏன் எம்எம்ஏவை வாழ்க்கை இலக்காக தேர்ந்தெடுத்தார்கள் என்பதை இந்த படம் முழுவதுமாக விளக்கவில்லை. மேலும் அனன்யா பாண்டேவுக்கும் விஜய் தேவரகொண்டாவுக்கும் இடையே காதல் மலர்வதற்கு தெரு சண்டையை காரணமாக வைத்திருப்பதும் விமர்சனங்களுக்கு உள்ளாகி உள்ளது. 

LIGER

இரண்டாம் பாதியில் 10 நிமிடங்களில் லைகரின் கதை உச்சத்தை அடைகிறது. ஆனால் பூரி ஜெகன்நாத் அதை இறுதிவரை நீட்டிக்கிறார். அமெரிக்க குத்து சண்டை ஜாம்பவான்கள் அறிமுகப்படுத்தப்படுகிறார்கள். இந்த கேமியோ மிகவும் தேவையான உயர்வை கொண்டு வரும் நோக்கம் கொண்டதாக இருந்தாலும், அது தற்போது தேவையான ஒன்றாக இடம்பெறவில்லை. 

மேலும் செய்திகள்: பிக்பாஸ் பிரபலம் மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம் செய்யப்பட்டு கொலை? சகோதரர் பரபரப்பு புகார்!
பூரி ஜெகநாத்தின் திரைக்கதை எந்தவிதமான உணர்ச்சி தூண்டல்களையும் கொள்ளவில்லை. ஒன்று அல்லது இரண்டு காட்சிகளைத் தவிர ஒவ்வொரு காட்சியும் தேவையற்றது. அவை மற்ற வணிகப் படங்களில் இருந்து சேர்க்கப்பட்டது. ட்ரெய்லர் ஏற்படுத்திய எதிர்பார்ப்புகளை திரையரங்குகளில் ரசிகர்கள் அனுபவிக்கவில்லை என்பதே படத்தின் மோசமான விமர்சனமாக உள்ளது.

LIGER

ஆனாலும் விஜய் தேவரகொண்டா இந்த படத்திற்காக உடல் மாற்றம் செய்துள்ளது பாராட்டுக்குரிய விஷயமாகவே உள்ளது. இருந்தும் நடிகர் இன்னும் அர்ஜுன் ரெட்டி போன்றே தோன்றுகிறார். ரம்யா கிருஷ்ணன், அனன்யா பாண்டேவின் கதாபாத்திரம் பாராட்டை பெற்றுள்ளது.  ஏனென்றால் துன்பத்தில் இருக்கும் பெண்ணாக அனன்யா பாண்டேவும் தெம்பளிக்கும் தாயாக ரம்யா கிருஷ்ணனும் வரும்  கதாபாத்திரங்கள் பாராட்டுக்குரியதாகவே இருக்கின்றன. 

மேலும் செய்திகள்: நீண்ட நாள் காதலியான நடிகையை கரம் பிடித்த 'சூரரை போற்று' பிரபலம்!

ஆனால் ஆண்களின் கவன சிதைவிற்கு பெண்களை குற்றம் சாட்டும் படங்களில் நீண்ட பட்டியலில் லைகரும் தற்போது இணைந்துள்ளது. புரமோஷன் விழாக்களுக்கு அதிக நேரம் செலவிட்ட படக்குழு ஸ்கிரிப்ட் எழுதுவதற்கு நேரம் செலவிட்டிருக்கலாம் என்கிற விமர்சனங்களையும் நெட்டிசன்கள் எடுத்து வைத்து வருகின்றனர்.

LIGER

இந படத்தை பூரி ஜெகன்னாத் எழுதி இயக்கியுள்ளார். இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்ட இப்படத்தை தர்மா புரொடக்ஷன்ஸ் மற்றும் பூரி கனெக்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. விஜய் தேவரகொண்டா , எம்எம்ஏ போர் குத்துச்சண்டை வீரராக வரும் இந்த படத்தில் அனன்யா பாண்டே , ரம்யா கிருஷ்ணா, ரோனித் ராய் மற்றும் விசு ரெட்டி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இவர்களுடன்  அமெரிக்க குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் இந்த படத்தில் காமியோவாக நடித்ததன் மூலம் இந்திய சினிமாவில் அறிமுகமானார். மேலும் இந்த படம் மூலம் பாலிவுட்டிற்குள் நுழைகிறார் விஜய்.  பாடல்களுக்கு தனிஷ்க் பாக்சி மற்றும் விக்ரம் மாண்ட்ரோஸ் இசையமைத்துள்ளனர். "தி லிகர் ஹன்ட் தீம், அக்டி பக்கடி, வாட் லகா டெங்கே,  ஆஃபத்,  கோகா 2.0,  தாக்குதல் உள்ளிட்ட பாடல்கள் முன்னதாக வெளியாகி வரவேற்பை பெற்றது.

Latest Videos

click me!