பாலிவுட் திரையுலகின் பாட்ஷாவாக வலம் வருபவர் ஷாருக்கான். இவர் ஹீரோவாக நடித்து கடைசியாக வெளிவந்த திரைப்படம் ஜீரோ. கடந்த 2018-ம் ஆண்டு ரிலீஸ் ஆன இத்திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. அதன்பின் 4 ஆண்டுகளாக அவர் ஹீரோவாக நடித்த படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகவில்லை. இந்த 4 ஆண்டுகளில் இடையிடையே ராக்கெட்ரி, லால் சிங் சத்தா, பிரம்மாஸ்திரா போன்ற திரைப்படங்களில் கேமியோ ரோலில் மட்டும் நடித்திருந்தார் ஷாருக்.
இந்நிலையில், சுமார் 4 ஆண்டுகள் இடைவெளிக்கு பின்னர் ஷாருக்கான் ஹீரோவாக நடித்துள்ள பதான் திரைப்படம் இன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி உள்ளது. இப்படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்கி உள்ளார். இதில் ஷாருக் கான் உடன் தீபிகா படுகோனே, ஜான் ஆபிரஹாம் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் உலகமெங்கும் 7500-க்கும் மேற்பட்ட திரைகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகி உள்ளது.