பிக்பாஸ் கவின் கலக்கினாரா? சொதப்பினாரா?... டாடா படம் எப்படி இருக்கு? - முழு விமர்சனம் இதோ

கணேஷ் கே பாபு இயக்கத்தில் கவின், அபர்ணா தாஸ், விடிவி கணேஷ் நடிப்பில் வெளியாகி இருக்கும் டாடா படத்தின் டுவிட்டர் விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம். 

பிக்பாஸ் மூலம் பிரபலமானவர் கவின். அவர் நடிப்பில் தற்போது வெளியாகி உள்ள திரைப்படம் டாடா. கணேஷ் கே பாபு இயக்கியுள்ள இப்படத்தில் கவினுக்கு ஜோடியாக அபர்ணா தாஸ் நடித்துள்ளார். அம்பேத்குமார் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ளார். இப்படம் இன்று தமிழகமெங்கும் 400 திரையரங்குகளில் ரிலீசாகி உள்ளது. இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அப்படத்தின் டுவிட்டர் விமர்சனத்தை தற்போது பார்க்கலாம்.

டாடா படம் பார்த்த நெட்டிசன் ஒருவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது : “நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஒரு ஃபீல் குட் படமாக டாடா உள்ளது. கவினும், அபர்ணா தாஸும் எதார்த்தமாக நடித்துள்ளனர். படக்குழு சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளது. திரையரங்கில் குடும்பத்தோடு என்ஜாய் பண்ணி பார்க்க வேண்டிய படம் இது” என குறிப்பிட்டுள்ளார்.


மற்றொரு நெட்டிசன் போட்டுள்ள டுவிட்டில், “சிறப்பாக எழுதப்பட்ட ஃபீல் குட் மூவி டாடா. எமோஷனலாக படம் கனெக்ட் ஆகிறது. கவின் பெர்பார்மென்ஸ் செம்ம. ஒரு நட்சத்திரம் பிறந்துவிட்டான். பிரதீப் அந்தோனியின் காட்சிகள் மரண ஃபன் ஆக உள்ளது. பாடல்களும், பின்னணி இசையும் நன்றாக இருக்கிறது. டாடா உங்களை சிரிக்கவும் வைக்கும், அழவும் வைக்கும். இயக்குனர் கணேஷ் கே பாபுவுக்கு பாராட்டுக்கள். கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்” என பதிவிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்... டூடுல் வெளியிட்டு ஹீரோயினை கவுரவித்த கூகுள்... யார் இந்த பி.கே.ரோஸி?

இன்னொரு நெட்டிசன் போட்டுள்ள டுவிட்டில், “கவினுக்கு நடிப்பு ஈஸியாக வருகிறது. எமோஷனல், காமெடி, செண்டிமெண்ட், கோபம் என அனைத்தையும் சிறப்பாக செய்துள்ளார். அவரை பெரிய திரையில் பார்க்கும் போது ஆனந்தமாக உள்ளது. அவரது நடிப்பு கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கிறது. டாடா படத்தை என்ஜாய் பண்ணினேன். கவின் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்” என பதிவிட்டுள்ளார்.

டாடா படம் குறித்து நெட்டிசன் ஒருவர் பதிவிட்டுள்ளதாவது : “டாடா சிறப்பான படம். கிளைமாக்ஸில் அபர்ணா தாஸின் நடிப்பு வெறித்தனமாக உள்ளது. தனித்துவமான கதை தேர்வின் மூலம் ரசிகர்களை பெருமைப்படுத்தி இருக்கிறார் கவின். அவரின் நடிப்பும் செம்ம மாஸ் ஆக உள்ளது. மொத்தத்தில் டாடா பிளாக்பஸ்டர்” என பாரட்டி உள்ளார்.

மற்றொரு டுவிட்டில், ”சிம்பிள் லைனாக இருந்தாலும் அதனை சிறப்பாக எடுத்துள்ளனர். கவின் மற்றும் அபர்ணா தாஸின் நடிப்பு மிரட்டலாக உள்ளது. இந்த படம் நிச்சயம் உங்களை சிரிக்க வைக்கும், கைதட்ட வைக்கும், குறிப்பாக கிளைமாக்ஸில் அழ வைக்கும். நிறைய புது சீன்கள் படத்தில் உள்ளன. பாடல்களை பயன்படுத்திய விதம் அருமை. ஃபீல் குட் மூவி. 100 சதவீதம் பிளாக்பஸ்டர். நிச்சயம் பார்க்க வேண்டிய படம்” என குறிப்பிட்டுள்ளார்.

மேற்கண்ட விமர்சனங்களை பார்க்கும் போது டாடா படத்துக்கு பெரும்பாலும் பாசிடிவ் விமர்சனங்களே கிடைத்து வருகின்றன. இதன்மூலம் இப்படம் கவினுக்கு வெற்றிப்படமாக அமையும் என தெரிகிறது.

இதையும் படியுங்கள்... பொன்னியின் செல்வன் 2 படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்படுகிறதா? தீயாய் பரவும் தகவல்... பின்னணி என்ன?

Latest Videos

click me!