விஜய் டிவி தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான, மற்றும் பலரது ஃபேவரட் ரியாலிட்டி ஷோவாக இருந்து வருகிறது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி. சூப்பர் சிங்கர் ஜூனியர் மற்றும் சீனியர் என இரண்டு தரப்பினருக்கும் மாறி மாறி நடைபெறும் இந்த நிகழ்ச்சிக்கு என உலக அளவில் பல ரசிகர்கள் உள்ளனர்.
அந்த வகையில், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் தான் அஜய் கிருஷ்ணா. இவர் உதித் நாராயணன் போலவே பாடுவதில் வல்லவர். இவர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது, மிகவும் பிரபலமாகவில்லை என்றாலும்... பின்னர் சீனியர் மற்றும் ஜூனியர் என இருதரப்புக்கும் நடைபெற்ற போட்டியின் போது, ஜூனியர் பாடகர்களுக்கு சப்போர்ட் செய்து மிகவும் பிரபலமானார்.
இதை தொடர்ந்து அஜய் கிருஷ்ணா - ஜெசி தம்பதிக்கு, பிப்ரவரி 12ஆம் தேதி அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவலை அவரே தன்னுடைய சமூக வலைதளத்தில் மனைவியின் கர்ப்பகால புகைப்படம் வெளியிட்டு அறிவித்துள்ளார். இதை அடுத்து ரசிகர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.