
இந்திய சினிமாவின், எவர்கிரீன் பாடகி என பெயர் எடுத்தவர் பி.சுசீலா. இவருடைய குரல் அழகை வர்ணிக்கும் விதமாக, 'நைட்டிங்கேல்' என்றே ரசிகர்கள் இவரை செல்லமாக அழைக்கின்றனர். தன்னுடைய ஈடுஇணையற்ற குரலால்... தேன் சிந்தும் இனிமையான பாடல்களை பாடிய பி.சுசீலாவின் வாழ்க்கை பயணம் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
1935 ஆம் ஆண்டு, நவம்பர் 13 ஆம் தேதி ஆந்திரா மாநிலம் விஜய நகரம் பகுதியில் பிறந்தவர் தான் பி.சுசீலா. இவருடைய தந்தை புலபாக்க முகுந்தராவ் ஒரு வழக்கறிஞர் ஆவார். தாயார் சரசம்மா வீட்டை கவனித்து வந்தார்.
பணக்கார குடும்பத்தில் பிறந்த பி. சுசீலாவுக்கு 5 சகோதரிகள், மற்றும் 3 சகோதரர்கள் இருந்த போதும், இவருக்கு மட்டுமே பாடல்கள் படுவது மீது ஆர்வம் இருந்தது. இதை கண்டறிந்த அவரின் தந்தை, பி.சுசீலாவை பாடல்கள் பாட ஊக்குவித்தார். சிறு வயதிலேயே முறைப்படி கர்நாடக சங்கீததம் பயின்ற பி.சுசீலா, பின்னர் விஜயநகரம் இசைக்கல்லூரியில் இசைக்கான டிப்ளமோ பட்டத்தை முடித்தார்.
தன்னுடைய இசை ஞானத்தை வளர்த்து கொள்ள, ஆந்திராவின் புகழ்பெற்ற இசை மேதையான துவாரம் வெங்கடசாமி நாயுடுவிடம், முறையாக இசை பயிற்சி பெற்றார். அதே போல் தன்னுடைய இளம் வயதிலேயே, பல இசை நிகழ்ச்சிகளில் பாடிய சுசீலா, சென்னை வானொலியில் பாப்பா மலர் என்கிற நிகழ்ச்சியில் பல பாடல்களை பாடி வந்தார்.
பிக் பாஸ்; மீண்டும் "ஆண்டவர்" வரணும்; கோஷம் எழுப்பும் ரசிகர்கள் - விஜய் சேதுபதி மீது அதிருப்தியா?
வானொலியின் மூலம் பி.சுசீலாவின் குரலை கேட்டு இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உருவானது. பி.சுசீலாவின் குரலால் கவர்ந்திழுக்கப்பட்ட, தெலுங்கு இசையமைப்பாளர் பெண்டியாலா நாகேஸ்வரராவ், 1952 ஆம் ஆண்டு தான் இசையமைத்த 'பெற்ற தாய்' படத்தில் இடம்பெற்ற எதற்கு அழைத்தாய் என்ற பாடல் மூலம் சுசீலாவை திரையுலகில் அறிமுகப்படுத்தினார். பிரபல பாடகர் ஏ.எம். ராஜாவுடன் பி.சுசீலா இணைந்து பாடிய அந்த பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
அதை தொடர்ந்து தமிழ் சினிமாவிலியும் இவரை பாட வைக்க பல இசையமைப்பாளர்கள் போட்டி போட்டனர். தமிழ் - தெலுங்கு மட்டும் இன்றி, மலையாளம், இந்தி என மொழி கடந்து பல பாடல்களை பி.சுசீலா பாடினார். 1960, 70, 80, 90-களில் முன்னணி பாடகியாக உயர்ந்து பல பாடல்களை பாடி வந்தார்.
இவருடைய தாய் மொழி தெலுங்கு என்பதால், இவரது தமிழ் வார்த்தைகளின் உச்சரிப்பு சரியாக இல்லை என்கிற விமர்சனம் எழுந்ததை தொடர்ந்து, தமிழ் உச்சரிப்பை சரியாக பேச தமிழ் ஆசிரியர் மூலம் தமிழ் மொழியை கற்று கொண்டார். பின்னர் தமிழ் வார்த்தைகள் இவருடைய பாடல்களில் சரளமாக விளையாடியது. அதிலும் குறிப்பாக 1965 ஆம் ஆண்டு விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் வெளிவந்த பஞ்சவர்ணகிளி திரைப்படத்தில், இடம்பெற்ற தமிழுக்கும் அமுதென்று பேர் பாடலில் இவரின் உச்சரிப்பு அற்புதம் என அனைவரும் பாராட்டும் விதத்தில் இருந்தது.
இந்திய சினிமாவில் 1967 ஆம் ஆண்டு முன்னர் வரை பாடகர்களுக்கு தேசிய விருது வழங்கப்படவில்லை. 1967 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட 15 வது தேசிய விருதுகளில், மகேந்திரா கபூர் என்ற பாடகருக்கு தான் முதன்முதலில் தேசிய விருது வழங்கப்பட்டது. அதே வேளையில் பெண் பாடகிக்கு வழங்கப்படவில்லை.
பெண்களுக்கும் விருது வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றதை தொடர்ந்து, 1968 வது ஆண்டு அறிவிக்கப்பட்ட தேசிய விருதுகளில், உயர்ந்த மனிதன் படத்தில் இடம் பெற்ற நாளை இந்த வேலை பார்த்து ஓடி வா நிலா பாடலை பாடியதற்கு, பி சுசீலாவுக்கு முதல் முதலில் தேசிய விருதை பெற்றார். அந்த வகையில் இந்திய திரையுலகில் தேசிய விருது பெற்ற முதல் பெண் பாடகி என்ற பெருமை பி சுசீலாவை தான் சேரும்.
சூர்யாவை காப்பாற்றுமா 'கங்குவா'? ரிலீசுக்கு முன் வந்த பர்ஸ்ட் ரிவ்யூ இதோ!
அதற்கு அடுத்த சில ஆண்டுகளில் , 'சவாலே சமாளி' படத்தில் 'சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு என்ற பாடலுக்காக மீண்டும் தேசிய விருது பெற்றார் சுசீலா. ஒருகட்டத்தில் 60கள், 70கள் , சுசீலா குரல் இடம்பெறாத தமிழ் படங்களே இல்லை என சொல்லும் அளவுக்கு, ஓய்வின்றி பாட தொடங்கினார். விஸ்வநாதன்-ராமமூர்த்தி, கே.வி.மகாதேவன், இசையில் தான் பி.சுசீலா ஏராளமான பாடல்களை பாடினார்.
இவர் பாடிய பாடங்களில், "அன்பே வா திரைப்படத்தில் இடம்பெற்ற லவ் பேர்ட்ஸ் லவ் பேர்ட்ஸ், கற்பகம் படத்தில் பக்கத்து வீட்டு பருவ மச்சான், பாவ மன்னிப்பு படத்தில் அத்தான் என் அத்தான் அவர் என்னைத்தான், புதிய பறவை படத்தில் சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து, பாலும் பழமும் படத்தில் ஆலையமணியின் ஓசை நான் கேட்டேன், பாக்கியலட்சுமி படத்தில் மாலை பொழுதின் மயக்கத்திலே நான், வெண்ணிற ஆடை படத்தில் என்ன என்ன வார்த்தைகளோ சின்ன விழி பார்வையிலே, தில்லானா மோகனாம்பாள் படத்தில் மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன, எதிர் நீச்சல் படத்தில் அடுத்தாத்து அம்புஜத்தை பார்த்தேளா இப்படி எண்ணற்ற பாடல்களை சொல்லிக்கொண்டே போகலாம்... போன்ற பாடல்கள் இவரை எப்போதுமே எவர் கிரீன் பாடகியாக பார்க்க வைத்தது.
அதே போல் 80 களில் கோலோச்சிய இசையமைப்பாளர் இளையராஜாவின் இசையில் சிட்டுக்குருவி படத்தில் இடம்பெற்ற என் கண்மணி.. உயர்ந்த உள்ளம் படத்தில் இடம்பெற்ற காலைத்தென்றல் பாடி வரும் ... சின்ன கவுண்டர் படத்தில் இடம்பெற்ற முத்துமணி மாலை.. கேளடி கண்மணி படத்தில் இடம்பெற்ற கற்பூற பொம்மை ஒன்று.. பூந்தோட்ட காவல்காரன் படத்தில் இடம்பெற்ற சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு போன்ற பல பாடல்களை பாடி உள்ளார்.
இளையராஜாவை தொடர்ந்து, இந்திய பெருமையை ஆஸ்கர் மேடையில் ஏற்றி அழகு பார்த்த, ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இவர் பாடிய கண்ணுக்கு மை அழகு பாடல் ரசிகர்களின் ஆல் டைம் ஃபேவரட் பாடலாக உள்ளது.
இதுவரை 1968, 1971, 1976, 1982 , 1983 ஆண்டுகளில் 5 முறை தேசிய விருதுகளை வென்றுள்ள சுசீலா. தமிழக அரசின் கலைமாமணி விருது, 3 முறை தமிழக அரசின் விருது, 7 முறை ஆந்திர அரசின் விருது, 2 முறை கேரள அரசின் விருதுகளையும் பெற்றுள்ளார். 2008-ம் ஆண்டிற்கான பத்மபூஷன் விருதை இவருக்கு வழங்கி... பெருமை படுத்தியது மத்திய அரசு.
ஜான்வி கபூர் அந்த இடத்தை பெரிதாக்க அறுவை சிகிச்சை செய்தாரா? தீயாய் பரவும் புகைப்படம்!
தமிழ், தெலுங்கு மட்டுமல்லாமல், மலையாளம், கன்னடம், பெங்காலி, இந்தி, ஒரியா, சமஸ்கிருதம் மற்றும் சிங்களம் என பல மொழிகளில் பல்லாயிரம் பாடல்களை பாடியுள்ளார் பி.சுசீலா. இது தவிர சோலோவாக 17,695 பாடல்களைப் பாடிய ஒரே பின்னணி பாடகி என்ற சாதனையைப் படைத்து, கின்னஸ் புத்தகத்திலும் இடம் பிடித்தார்.
90 களில் திரை இசையில் இருந்து சற்று ஒதுங்கிய சுசீலா, பக்தி பாடல்கள் பாடுவதில் கவனம் செலுத்தினார். குறிப்பாக திருமலை திருப்பதிக்கு சென்றால் அங்கு நாம் கேட்கும் பல பக்தி பாடல்கள் சுசீலா பாடியவை தான். பாடகியாக பிஸியாக இருந்த காலக்கட்டத்தில் பல இயக்குனர்கள் சுசீலாவை நடிக்க வைக்க முயற்சி செய்தனர். ஆனால் சுசீலா நடிக்க வந்த வாய்ப்புகளை ஏற்க மறுத்துவிட்டார். இருப்பினும் 2001 ஆம் ஆண்டு வெளிவந்த மனதை திருடிவிட்டாய் திரைப்படத்தில், பாடகி சுசீலாவாகவே திரையில் தோன்றினார்.
பி. சுசீலா 1957-ல் டாக்டர் மோகன்ராவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஜெயக்கிருஷ்ணா என்ற மகன் இருக்கிறார். சுசீலாவின் சேவை பாடுவதோடு நின்றுவிடவில்லை. 2008-ம் ஆண்டு தனது பெயரில் ஒரு டிரஸ்ட்டை தொடங்கி, அதில் நலிவுற்ற இசைக்கலைஞர்களுக்கு மாத உதவித் தொகை வழங்கி வருகிறார். இது தவிர சிறந்த இசைக் கலைஞர்களுக்கு விருதுகளும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
வயது முதிர்வு காரணமாக பாடல்கள் பாடுவதில் இருந்து முழுமையாக ஒதுங்கியே உள்ளார். அடிக்கடி இவருடைய உடல் நலன் பற்றிய சில வந்தந்திகளும் வந்து செல்வது வாடிக்கையாகி விட்டது. கடந்த ஆண்டு நடைபெற்ற, கருணாநிதி நூற்றாண்டு நினைவு விழாவில், கவிஞர் மு. மேத்தா அவர்களுக்கும், பின்னணி பாடகி பி.சுசீலாவுக்கும் 2023-ஆம் ஆண்டிற்கான கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதுடன் தலா 10 இலட்சம் ரூபாய்க்கான காசோலையும், நினைவுப் பரிசும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
வயது முதிர்வு காரணமாக பி.சுசீலா வீல்சேரில் வந்த நிலையில் அவரது உடல் நலன் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் அன்போடு கை பிடித்து விசாரித்தது குறிப்பிடத்தக்கது. 1952 ஆம் ஆண்டு தொடங்கி, சுமார் எழுபது ஆண்டுகள் கடந்து சுசீலாவின் பாடல்கள் இன்றைய தலைமுறையினராலும் ரசிக்கப்பட்டு வருகின்றன. மேலும் இன்று தன்னுடைய 89-ஆவது பிறந்த நாளை கொண்டாடும் இந்தியன் நைட்டிங்கேல் பி.சுசீலாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது.
விவாகரத்தான நடிகரை ரூ.3310 கோடி சொத்துக்காக வளைத்து போட்டாரா? யார் இந்த தமிழ் பட ஹீரோயின்?