6 வருஷமா அஜித் மீதுள்ள கோபம்; கூலி படம் மூலம் பழிவாங்க முடிவெடுத்த ரஜினி!

First Published | Nov 13, 2024, 11:38 AM IST

அஜித் நடிப்பில் உருவாகி வரும் குட் பேட் அக்லி படத்துக்கு போட்டியாக ரஜினிகாந்தின் கூலி படம் ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Ajith vs Rajinikanth

அஜித் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் குட் பேட் அக்லி. இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். நடிகர் அஜித்தின் தீவிர ரசிகரான இவர், இதற்கு முன்னர் த்ரிஷா இல்லேனா நயன்தாரா, மார்க் ஆண்டனி போன்ற ஹிட் படங்களை இயக்கி இருக்கிறார். இதையடுத்து அஜித்துடன் முதன்முறையாக இணைந்துள்ள ஆதிக், ஒரு ஃபேன் பாய் சம்பவமாக குட் பேட் அக்லி படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.

Good bad ugly

குட் பேட் அக்லி படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இப்படத்தை மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது. குட் பேட் அக்லி படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது ஸ்பெயில் நாட்டில் நடைபெற்று வருகிறது. இப்படத்தை வருகிற 2025-ம் ஆண்டு மே மாதம் 1-ந் தேதி உழைப்பாளர் தினத்தன்று ரிலீஸ் செய்ய திட்டமிட்டு உள்ளனர். மேலும் அன்று அஜித்தின் பிறந்தநாளும் வருவதால் குட் பேட் அக்லி படம் அஜித் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் ஆக அமையும் என கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... அஜித்தை ஒரு கை பார்க்க முடிவு; விடாமுயற்சிக்கு வில்லனாக வரும் பாலா!

Tap to resize

Rajini clash with Ajith

இதனிடையே குட் பேட் அக்லி படத்துக்கு போட்டியாக தற்போது ரஜினிகாந்தின் கூலி படமும் ரிலீஸ் ஆக உள்ளதாக கூறப்படுகிறது. மே 1ம் தேதி வியாழக்கிழமை அரசு விடுமுறை அதுமட்டுமின்றி வெள்ளி, சனி, ஞாயிறு என தொடர்ந்து வார இறுதி நாட்கள் வருவதால் அப்போது வெளியிட்டால் இப்படத்திற்கு நல்ல கலெக்‌ஷனும் வரும் என்பதை கருத்தில் கொண்டு அப்போது ரிலீஸ் செய்யும் ஐடியாவில் படக்குழு உள்ளது. இதற்கு முன்னர் கடந்த 2019-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு அஜித்தின் விஸ்வாசம் படமும் ரஜினியின் பேட்ட படமும் நேருக்கு நேர் மோதின. அதில் அஜித் வெற்றி பெற்றார்.

Coolie

தற்போது 6 ஆண்டுகளுக்கு பின் நடக்க உள்ள கூலி vs குட் பேட் அக்லி பாக்ஸ் ஆபிஸ் மோதலில் யார் வெற்றிபெறுவார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ரஜினிகாந்தின் கூலி திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். இப்படத்தில் ரஜினிகாந்த் உடன் சத்யராஜ், உபேந்திரா, நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இதையும் படியுங்கள்... அஜித்தின் சிட்டிசன்; ஜஸ்ட் மிஸில் தவறவிட்ட தளபதி விஜய் - 23 வருட ரகசியத்தை உடைத்த இயக்குனர்!

Latest Videos

click me!