விஜய்யும் இல்ல; ரஜினியும் இல்ல - அதிக ஹிட் படங்களை கொடுத்த ஹீரோ யார் தெரியுமா?

First Published | Nov 13, 2024, 8:29 AM IST

இந்தியாவிலேயே அதிக ஹிட் படங்களை கொடுத்த நடிகர் யார் என்பதையும் அவர் எத்தனை ஹிட் படங்களில் நடித்திருக்கிறார் என்பதையும் பார்க்கலாம்.

Actor who Give Most Hit Movies

சினிமா என்பது ஒரு கடல் போன்றது. இங்கு ஒரு படத்தில் ஜெயித்தால் மட்டும் போதாது ஜெயித்துக் கொண்டே இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் நிலைத்திருக்க முடியும். அப்படி தொடர்ந்து வெற்றிகளை கொடுப்பதால் தான் மக்களின் அபிமானத்தை பெற்று ரஜினி, கமல் போன்ற நடிகர்கள் 60 வயதைக் கடந்தும் முன்னணி ஹீரோக்களாக வலம் வருகின்றனர். கோலிவுட் தொடங்கி பாலிவுட் வரை விஜய், ரஜினி, அஜித், கமல், ஷாருக்கான், பிரபாஸ், அமிதாப் பச்சன் போன்ற சக்சஸ்புல் நடிகர்கள் ஏராளமானோர் இருந்தாலும் இவர்களையெல்லாம் மிஞ்சும் வகையில் அதிக ஹிட் படங்களில் நடித்த ஹீரோ ஒருவரைப் பற்றி தான் தற்போது பார்க்க உள்ளோம்.

Prem Nazir

அவர் வேறுயாருமில்லை, மலையாள திரையுலகில் சூப்பர்ஸ்டாராக வலம் வந்த பிரேம் நசீர் தான். 1950களில் மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக கோலோச்சி வந்தவர் பிரேம் நசீர். அந்த காலகட்டத்தில் அதிக படங்களில் நடித்தது, அதிகப்படியான இரட்டை வேடங்களில் நடித்தது என இவர் படைத்த சாதனைகள் ஏராளம். கடந்த 1979-ம் ஆண்டு மட்டும் பிரேம் நசீர் மொத்தம் 39 படங்களில் நடித்திருந்தார். ஒரே ஆண்டில் இத்தனை படங்களில் எந்த ஹீரோவும் நடித்ததில்லை.

இதையும் படியுங்கள்... கங்குவா உடன் மோத பயமா? கடைசி நேரத்தில் எஸ்கேப் ஆன விஜய் சேதுபதி மகன் படம்- காரணம் என்ன?

Tap to resize

Prem Nazir movie Records

அதுமட்டுமின்றி அதிக ஹிட் படங்களை கொடுத்த ஹீரோவும் இவர் தான். இவர் நடித்த 700 படங்களில் 400க்கும் மேற்பட்ட படங்கள் ஹிட் அடித்துள்ளன. அதுமட்டுமின்றி 50 பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்த ஒரே ஹீரோவும் இவர் தான். இவருக்கு அடுத்தபடியாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளார். அவர் 80 ஹிட் படங்களையும் 12 பிளாக்பஸ்டர் ஹிட் படங்களையும் கொடுத்திருக்கிறார். இதேபோல் பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன் 60 ஹிட் படங்களையும் 10 பிளாக்பஸ்டர் ஹிட் படங்களையும் கொடுத்துள்ளார்.

Prem Nazir Hit Movies

நடிகர் பிரேம் நசீர் மொத்தம் 85 ஹீரோயின்களுடன் நடித்திருக்கிறார். அதுமட்டுமின்றி ஒரு நடிகையுடன் மட்டும் 130 படங்களில் நடித்துள்ளார் பிரேம் நசீர். அந்த நடிகையின் பெயர் ஷீலா. இவர் தனக்கு லக்கி சார்ம் ஆக இருந்ததால் அவருடன் அதிகப்படியான படங்களில் பிரேம் நசீர் நடித்திருந்தார். அதுமட்டுமின்றி 40 படங்களில் இவர் டபுள் ரோலில் நடித்திருந்தார். இந்த சாதனையை இன்று வரை எந்த ஹீரோவும் முறியடிக்கவில்லை. 

Malayalam actor Prem Nazir

பிரேம் நசீரின் இந்த வெற்றிகரமான திரைப்பயணத்திற்கு அவரின் பாலிசியும் ஒரு காரணம். அவர் நடித்து ஏதேனும் ஒரு படம் தோல்வி அடைந்துவிட்டால் உடனடியாக அந்த படத்தின் தயாரிப்பாளருடன் இன்னொரு படம் பண்ணுவாராம். அவரின் நஷ்டத்தை ஈடுகட்ட பிரேம் நசீர் அவ்வாறு செய்து வந்துள்ளார். இப்படி ஒரு தங்கமான மனுஷனாக இருந்து வந்த பிரேம் நசீர் கடந்த 1989-ம் ஆண்டு காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... தளபதி 69; களமிறங்குகிறார் ஜெயிலர் பட மாஸ் நடிகர் - அவரே சொன்ன தகவல் - Viral Video!

Latest Videos

click me!