கங்குவா உடன் மோத பயமா? கடைசி நேரத்தில் எஸ்கேப் ஆன விஜய் சேதுபதி மகன் படம்- காரணம் என்ன?

First Published | Nov 13, 2024, 7:34 AM IST

மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி ஹீரோவாக அறிமுகமாகும் பீனிக்ஸ் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி திடீரென தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.

Phoenix, Kanguva

மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கு சூர்யா என்கிற மகன் உள்ளார். இவர் ஏற்கனவே தன் தந்தையுடன் சுந்துபாத், நானும் ரெளடி தான் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். இவர் தற்போது முதன்முறையாக ஹீரோவாக நடித்துள்ள படம் பீனிக்ஸ். இப்படத்தை அனல் அரசு இயக்கி உள்ளார். இப்படத்திற்காக பிரத்யேகமாக பாக்ஸிங் பயிற்சி எடுத்து நடித்திருக்கிறார் சூர்யா சேதுபதி. பீனிக்ஸ் திரைப்படம் நவம்பர் 14-ந் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு அதற்கான புரமோஷன் பணிகளும் நடைபெற்று வந்தது.

Phoenix Movie Postponed

இதனிடையே ரிலீசுக்கு இன்னும் ஒரு நாட்களே இருக்கும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் ரிலீஸ் தேதி திடீரென மாற்றப்பட்டு உள்ளது. இதுகுறித்து படக்குழு வெளியிட்டுள்ள அறிவிப்பு, தவிர்க்க முடியாத காரணத்தால் பீனிக்ஸ் படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. விரைவில் புது ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளனர். இருப்பினும் தள்ளிவைக்கப்பட்டதற்கான காரணம் என்னவென்று படக்குழு தெளிவாக குறிப்பிடவில்லை.

இதையும் படியுங்கள்... சூர்யாவை காப்பாற்றுமா 'கங்குவா'? ரிலீசுக்கு முன் வந்த பர்ஸ்ட் ரிவ்யூ இதோ!

Tap to resize

Phoenix Movie

பீனிக்ஸ் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போவதற்கு சூர்யாவின் கங்குவா படம் தான் முக்கிய காரணமாக இருக்கும் என தெரிகிறது. கங்குவா படம் மிக பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆக உள்ளதால், தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான திரைகளை அப்படம் ஆக்கிரமித்து உள்ளது. அதனால் விஜய் சேதுபதி மகன் படத்திற்கு எதிர்பார்த்த அளவு தியேட்டர் எண்ணிக்கை கிடைக்காமல் போய் இருக்கலாம். அதனால் படக்குழு வேறு வழியின்றி ரிலீஸ் தேதியை தள்ளிவைத்திருக்க வாய்ப்பு உள்ளது.

Vijay Sethupathi Son Surya

இதுதவிர நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளிக்கு திரைக்கு வந்த அமரன் திரைப்படம் இரண்டு வாரங்களை கடந்து திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வருவதும் ஒரு காரணமாக கூறப்படுகிறது. கங்குவாவுக்கு அடுத்தபடியாக அதிகளவிலான திரையரங்குகளை அமரன் ஆக்கிரமித்து உள்ளதால் பீனிக்ஸ் படத்தின் ரிலீஸை தள்ளிவைத்து உள்ளனர். மகன் நடித்த முதல் படமே தள்ளிவைக்கப்பட்டு உள்ளதால் விஜய் சேதுபதி அப்செட்டில் உள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... கங்குவா படத்தின் சிறப்பு காட்சி; கிரீன் சிக்னல் காட்டிய தமிழக அரசு - FDFS எத்தனை மணிக்கு?

Latest Videos

click me!