உலக அளவில் சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படம் தற்பொழுது 250 கோடி ரூபாய் என்கின்ற இலக்கை கடந்து, 300 கோடி என்கின்ற இலக்கை நோக்கி பயணிக்க தொடங்கி இருக்கிறது. பிரபல நடிகை சாய் பல்லவி இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனின் மனைவியாக நடித்து அசத்தியிருக்கின்றார். சிவகார்த்திகேயனின் திரை வாழ்க்கையிலேயே மிகப்பெரிய வசூல் சாதனை படைத்த படமாகவும், அவருடைய கேரியர் பெஸ்ட் படமாகவும் மாறியிருக்கிறது அமரன். தமிழகத்தை சேர்ந்த மறைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் கதாபாத்திரத்தை தான் அவர் இந்த திரைப்படத்தில் ஏற்று நடித்திருக்கிறார். தொடக்கத்தில் சில சர்ச்சைகளை இந்த திரைப்படம் சந்தித்து வந்தாலும் தற்போது வெற்றிகரமாக திரையரங்குகளில் இந்த திரைப்படம் ஓடி வருகிறது.