தமிழ் சினிமாவில் ஒரே ஒரு படத்தில் மட்டும் நடித்திருந்தாலும், அந்த படம் 2 பாகமாக வெளியாகி ஆயிரம் கோடி வசூல் சாதனை செய்தது. அந்த படத்தில் நாயகியாக நடித்திருந்தவர் தான் இந்த குழந்தை.
திரையுலகில் காதல் சர்ச்சைகளில் பிரபலங்கள் சிக்குவது வழக்கமான ஒன்று என்றாலும், ஒரு சில பிரபலங்கள் மட்டுமே தங்களின் காதலை ஊரறிய கூறி திருமண பந்தத்தில் இணைகின்றனர். இன்னும் சிலர், திருமணத்திற்கு முன்பே பிரிந்து விடுகின்றனர். அந்த வகையில் தற்போது விவாகரத்தான நடிகரை சொத்துக்காக ஒரு இளம் நடிகை திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறப்படும் நிலையில் அந்த நடிகை யார்? என்ன சமாச்சாரம் என்பதை முழுமையாக பார்ப்போம்.
25
Shobita Dhulipala Childhood Pics
இந்த புகைப்படத்தில். செம்ம கியூட்டாக இருக்கும் இந்த குழந்தை நட்சத்திரம், வேறு யாரும் அல்ல... இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில், இரண்டு பாகங்களாக வெளியான 'பொன்னியின் செல்வன்' படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகை சோபிதா துலிபாலா தான்.
ஆந்திராவை சேர்ந்த இவர், நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர். இவருடைய தந்தை ஒரு வணிக கடற்படை பொறியாளராக இருந்தவர். அம்மா பள்ளி ஆசிரியை. தன்னுடைய பள்ளி படிப்பை விசாகப்பட்டினத்தில் முடித்த சோபிதா, பின்னர் மும்பைக்கு குடிபெயர்ந்தார். கார்ப்பரேட் சட்டம் பயின்று பின்னர் மும்பை பல்கலைக்கழகத்தில் H.R. வணிகம் மற்றும் பொருளாதாரம் தேர்வு செய்து படித்தார்.
படிப்பில் சோபிதா சுட்டி என்றாலும், சிறு வயதில் இருந்தே, பரதநாட்டியம் மற்றும் குச்சிப்புடியில் பயிற்சி பெற்றார். 2010 ஆண்டு நேவி பால் பின் 2010 என்கிற அழகி போட்டியில் கலந்து கொண்டு கடற்படை ராணியாக தேர்வு செய்யப்பட்டார். இது தான் சோபிதாவுக்கு அழகி போட்டி மீதான ஆர்வம் வர காரணமாக அமைந்தது.
தோழி மூலம் மாடலிங் துறையில் நுழைந்த சோபிதா, பிலிப்பைன்ஸில் நடந்த மிஸ் எர்த் 2013, மிஸ் ஃபோட்டோஜெனிக், மிஸ் பியூட்டி ஃபார் எ காஸ், மிஸ் டேலண்ட் மற்றும் மிஸ் பியூட்டிஃபுல் ஃபேஸ் ஆகிய பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். மாடலிங் செய்து கொண்டே திரைப்பட வாய்ப்புகளை தேட துவங்கிய இவருக்கு, பாலிவுட் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
45
Shobita Dhulipala and Nagachaitanya
பின்னர் தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்தார். பொன்னியின் செல்வன் படத்தில் வானதி கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்த நிலையில், சில ரசிகர்கள் தங்களின் அதிருப்தியையை தெரிவித்தனர்.
இந்நிலையில், தெலுங்கு நடிகர் நாகர்ஜுனா மகன் நாக சைதன்யாவுடன் டேட்டிங் செய்து வந்த சோபிதாவுக்கு, அடுத்த ஆண்டு சைதன்யாவுடன் திருமணம் நடைபெற உள்ளது. சமீபத்தில் தான் இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் எளிமையான முறையில் நடந்து முடிந்தது.
சமந்தா நாக சைதன்யாவை பிரிய முக்கிய காரணம் சோபிதா தான் என கூறப்படும் நிலையில், நாக சைதன்யா ரூ.3330 கோடி சொத்துக்கு அதிபதி என்பதால் தான் சோபிதா அவரை திருமணம் செய்து கொள்ள உள்ளதாவும் சில தகவல்கள் சமூக வலைத்தளத்தில் வைரலானது. ஆனால் நாக சைதன்யா ரசிகர்கள் இது உண்மையான காதல் என்பதால் தான் திருமணம் வரை வந்துள்ளதாக தங்களின் கருத்தை வெளிப்படுத்தி வந்தனர். கூடிய விரைவில் 3330 கோடி சொத்துக்கு அதிபதியாக இருக்கும் நாக சைதன்யாவின் மனைவியாக போகிறார் சோபிதா என்பது குறிப்பிடத்தக்கது.