நடிகர் சூர்யா, இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்து 2022-ஆம் ஆண்டு வெளியான 'எதற்கும் துணிந்தவன்' படத்திற்கு பின்னர், விக்ரம், ராக்கெட்டரி நம்பி ஏஃபெட், சர்பராஸ் போன்ற படங்களில் கேமியோ ரோலில் மட்டுமே நடித்த நிலையில், ஹீரோவாக நடித்து ஒரு படம் கூட வெளியாகாமல் இருந்தது.
'எதற்கும் துணிந்தவன்' ரிலீசுக்கு பின்னர், இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில்... 'கங்குவா' திரைப்படத்தில் நடிக்க கமிட் ஆனார். கடந்த இரண்டு வருடமாக எடுக்கப்பட்டு வந்த இப்படம் தீபாவளியை முன்னிட்டே வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஒருவழியாக நவம்பர் 14 ஆம் தேதி உலகம் முழுவதும் மிக பிரமாண்டமாக ரிலீஸ் ஆக உள்ளது.