மஞ்சள் வீரன்; கூல் சுரேஷுக்கும் படத்துக்கும் சம்மந்தம் இல்லை - இயக்குனர் செல்அம் அதிரடி அறிவிப்பு!

First Published | Nov 12, 2024, 4:59 PM IST

Manjal Veeran : இயக்குனர் செல்அம் இயக்கத்தில் பிரபல YouTuber TTF வாசன் நடிப்பில் உருவாக துவங்கிய திரைப்படம் தான் மஞ்சள் வீரன்.

Manjal Veeran

கடந்த 2015ம் ஆண்டு தமிழில் வெளியான திரு.வி.க பூங்கா என்கின்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் திரை உலகில் களமிறங்கியவர் தான் செந்தில் செல்அம். திரு. வி.க பூங்கா திரைப்படத்தில் நாயகனாகவும் நடித்திருந்தது செல்அம் தான். இந்த திரைப்படத்தில் பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் ஒரு பாடலை எழுதியிருந்தும் குறிப்பிடத்தக்கது. லோ பட்ஜெட் திரைப்படம் என்பதால் பெரிய அளவில் மக்கள் மத்தியில் இந்த திரைப்படம் வரவேற்பை பெறவில்லை. இந்த சூழலில் தான் அதிரடியாக இயக்குனர் செந்தில் ஒரு புதிய அறிவிப்பினை வெளியிட்டார். அதாவது பிரபல யூட்யூபர் TTF வாசன் தன்னுடைய இரண்டாவது திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

ஜான்வி கபூர் அந்த இடத்தை பெரிதாக்க அறுவை சிகிச்சை செய்தாரா? தீயாய் பரவும் புகைப்படம்!

Director Sel Am

ஏற்கனவே பிரபல YouTuber டிடிஎஃப் வாசன் ஒரு திரைப்படத்தில் நடித்திருந்த நிலையில், ஹீரோவாக மஞ்சள் வீரன் திரைப்படத்தில் அவர் நடிக்க ஒப்பந்தமானார். புல்லட் ஒன்றில் அவர் வருவது போன்ற ஒரு போஸ்டரும் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. ஆனால் திரைப்படம் அறிவிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் அந்த திரைப்படம் குறித்த அறிவிப்புகள் வெளியாகமலே இருந்து வந்தது. இதற்கு இடையில் இரண்டு முறை வாசன் போலீசாரால் கைது செய்யப்பட்டு பிறகு விடுவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. அவருக்கு நடந்த ஒரு சாலை விபத்தில் கைகளில் முறிவும் ஏற்பட்டு இருந்தது. இந்த சூழலில் சில வாரங்களுக்கு முன்பு வாசன் சரியான ஒத்துழைப்பு தராததன் காரணமாக மஞ்சள் வீரன் திரைப்படத்திலிருந்து அவரை நீக்குவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை வெளியிட்டார் இயக்குனர் செந்தில் செல்அம்.

Tap to resize

TTF Vasan

இதனை அடுத்து இயக்குனர் செந்தில் செல்அம் தான், தன்னை ஏமாற்றி விட்டதாகவும். ஷூட்டிங்கிற்கு எப்போது வர வேண்டும் என்று அழைத்து கேட்டால், அவருடைய தரப்பில் இருந்து எந்தவித பதிலும் வராது. பிறகு நான் எப்படி சென்று நடிப்பது என்ற ஒரு கேள்வியை அவர் முன் வைத்தார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் பேசிய இயக்குனர் செந்தில் செல்அம். "அவன் எப்போது அரஸ்டாகி எங்கே இருக்கிறான் என்பதே எனக்கு தெரியாது. பிறகு அவனை வைத்து நான் எப்படி படம் எடுப்பது" என்று கேள்வியை எழுப்பி பதில் தாக்குதலை கொடுத்திருந்தார். இந்த சூழலில் சில தினங்களுக்கு முன்பு பிரபல திரைப்பட நடிகர் கூல் சுரேஷ், மஞ்சள் வீரன் திரைப்படத்தில் நாயகனாக நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியானது. 

Cool Suresh

ஆனால் ட்விஸ்ட் ட்விஸ்ட் வைக்கும் விதமாக மீண்டும் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய இயக்குனர் செந்தில் செல்அம். விரைவில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கும் என்றும், ஆனால் நடிகர் கூல் சுரேஷ்க்கும், மஞ்சள் வீரன் திரைப்படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் கூறியுள்ளார். கூல் சுரேஷ் இந்த திரைப்படத்தில் நடிக்கவில்லை என்றும், வருகின்ற நவம்பர் மாத இறுதியில் அல்லது இறுதியில் இந்த திரைப்படத்தில் நாயகனாக நடிக்கப் போவது யார் என்கின்ற தகவல் வெளியாகும் என்றும் கூறியுள்ளார் அவர். 

ஆண்மை இருக்கானு அசிங்கப்படுத்திய பத்திரிகையாளர்; வாழ்நாள் முழுவதும் வருத்தப்பட வைத்த அஜித்!

Latest Videos

click me!