ஜான்வி கபூரின் கைகளில் உள்ள தழும்புகளைப் பார்த்து, அவர் லிபோசக்ஷன், மார்பக விரிவாக்கம் அறுவை சிகிச்சை செய்துள்ளாரா? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
ஜூனியர் என்.டி.ஆர் நடித்த 'தேவரா' படத்தின் மூலம் ஜான்வி கபூர் பாலிவுட் திரையுலகில் இருந்து, தெலுங்குத் திரையுலகில் கால் பதித்துள்ளார். மேலும் அவரது அழகு, மற்றும் அற்புதமான நடனத் திறமை, ஜூனியர் என்.டி.ஆர் உடனான கெமிஸ்ட்ரியும் பெருவாரியான ரசிகர்களை கவர்ந்தது. ஜான்வி கபூர் ஆடிய பத்தவைக்கும் பாடல் நல்ல வரவேற்பை பெற்றது தொடர்ந்து, ரசிகர்களும் அவரை போலவே நடனம் ஆடி சமூக வலைத்தளத்தில் வீடியோக்களை வெளியிட்டு வந்தனர்.
26
Jahnvi Kapoor
இந்தப் பாடலில் ஜான்வி கபூர், ஸ்ட்ராப் லெஸ் ஜாக்கெட் அணிந்திருந்த நிலையில், அவர் கையில் உள்ள தழும்பை சுட்டி காட்டி, ஜான்வி மார்பகத்தை பெரிதாக்க அறுவை சிகிச்சை செய்திருக்கலாம் என்ற நெட்டிசன்கள் புகைப்படம் வெளியிட்டு தங்களின் கருத்தை வெளிப்படுத்தி வந்தனர்.
அந்த வகையில் தான் லிபோசக்ஷன் சர்ச்சையில் சிக்கியுள்ளார் ஜான்வி கபூர். லிபோசக்ஷன் என்பது உடலின் சில பகுதிகளில் இருந்து கொழுப்பை அகற்றும் ஒரு மருத்துவ முறை ஆகும். பத்தவைக்கும் பாடல் வீடியோவில், ஜான்வியின் கைகளில் தழும்புகள் உள்ளன. இதன் ஸ்கிரீன்ஷாட்டுகளைப் பகிர்ந்த நபர், "அவருக்கு லிபோசக்ஷன் செய்யப்பட்டதாகக் கேள்விப்பட்டேன், எண்டோஸ்கோபிக் தழும்புகளை அக்குள்களிலும், தொப்புளிலும் காணலாம். லிபோ தழும்புகள் இவ்வாறுதான் இருக்குமா? நான் ஆச்சரியப்படுகிறேன்; அவை மறைக்கப்பட்டிருக்கும் என்று நினைத்தேன், ஆனால் அவை தெளிவாகத் தெரிகின்றன" என்று கமெண்ட் செய்துள்ளார்.
46
Lipo Surgery
மற்றொரு ரசிகர் ஒருவர், "நிச்சயமாக. அவருக்கு மார்பக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது அனைவருக்கும் தெரியும், அதனால் தழும்புகளை மறைக்க அவர் கவலைப்படவில்லை. இந்த தழும்புகள் லிபோசக்ஷனை விட மார்பக விரிவாக்கத்தின் விளைவாக இருக்கலாம். என ஏற்கனவே உள்ள புகைப்படங்களுடன் எடுத்த புகைப்படத்தை ஒப்பிட்டு பேசியுள்ளார்.
மற்றொருவர், "ஆம், அது லிபோ தழும்பு. நான் வயிறு, முதுகில் லிபோ செய்தேன், லிபோ தழும்புகள் இப்படித்தான் இருக்கும்" என்று எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
66
Janhvi viral pics
ஸ்ரீதேவியின் மூத்த மகளான ஜான்வி கபூர், இந்த காலகட்டத்தின் மிக அழகான நடிகைகளில் ஒருவராக அறியப்படுகிறார். அவரது அழகை தாண்டி, இவரது ஃபேஷன் தேர்வுகளும் அடிக்கடி பேசுபொருளாகின்றன. கூடிய விரைவில் ஜான்வி தமிழ் படங்களிலும் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.