ஆண்மை இருக்கானு அசிங்கப்படுத்திய பத்திரிகையாளர்; வாழ்நாள் முழுவதும் வருத்தப்பட வைத்த அஜித்!

First Published | Nov 12, 2024, 2:36 PM IST

தமிழ் சினிமாவின் வசூல் மன்னனாக இருக்கும், அஜித் குமார் பற்றி பத்திரிகையாளர் பாண்டியன் பேட்டி ஒன்றில் பகிர்ந்து கொண்டுள்ள தகவல், ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தி உள்ளது.
 

Ajith Movies

கோலிவுட் திரையுலகில், ஹீரோவாக அறிமுகமாவதற்கு முன்பே 1990 ஆம் ஆண்டு, 'என் வீடு என் கணவர்' என்கிற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் அஜித். இதை தொடர்ந்து, 1993 ஆம் ஆண்டு 'அமராவதி' திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். ஆனால் இந்த படம், எதிர்பார்த்த அளவுக்கு வெற்றிபெற வில்லை. இதை தொடர்ந்து அஜித் நடித்த பவித்ரா, ராஜாவின் பார்வையில், போன்ற படங்கள் அடுத்தடுத்து தயாரிப்பாளருக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியது.

Aasai Movie Hit Changed Ajith Life

தன்னால் யாருக்கும் நஷ்டம் ஏற்பட கூடாது என்பதை மனதில் வைத்து கொண்டு, திரை உலகை விட்டு விலகலாம் என்கிற முடிவில் அஜித் இருந்த போது தான், இயக்குனர் வசந்த் இயக்கத்தில் மணிரத்தினம் தயாரித்த 'ஆசை' படத்தில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. கடைசியாக இந்த ஒரே ஒரு படத்தில் மட்டும் நடித்து விடலாம் என அஜித் முடிவு செய்த நிலையில், 'ஆசை' படத்தின் வெற்றி அஜித்தின் முடிவையே மாற்றியது.  ஆசை படத்திற்கு பின்னர் ரசிகர்கள் அதிகம் விரும்பும் நாயகனாக மாறினார்.

அடேங்கப்பா... நெப்போலியன் தன்னுடைய மகன் தனுஷ் திருமணத்திற்கு எத்தனை கோடி செலவு செய்துள்ளார் தெரியுமா?
 

Tap to resize

Ajith Kumar Movie

பின்னர் பானுமதி, கல்லூரி வாசல், மைனர் மாப்பிள்ளை என தொடர்ந்து காதல் படங்களில் மட்டுமே நடித்து வந்த அஜித்துக்கு, 'காதல் கோட்டை' பிளாக் பாஸ்டர் வெற்றியை கொடுத்தது. திரையரங்கில் சுமார் 100 நாட்களுக்கு மேல்  இப்படம் ஓடியது மட்டும் இன்றி, சிறந்த படத்திற்கான தேசிய விருதையும் பெற்றது.  ஒரே மாதிரியான கதைகளை தேர்வு செய்து நடிக்காமல், ஆக்ஷன் கதைக்களத்தில் அஜித் ஆர்வம் காட்ட துவங்கினார். மேலும் வாலி, அமர்க்களம், கண்டு கொண்டேன் கண்டுகொண்டேன், தீனா, ராஜா, வில்லன், பில்லா 2, போன்ற படங்கள் ரசிகர்களின் ஆல் டைம் ஃபேவரட் படங்களாக உள்ளன.

Ajith and Shalini

அஜித் ஒரு சிறந்த நடிகர் என்பதை தாண்டி, சிறந்த மனிதராகவும் ரசிகர்கள் மத்தியில் அறியப்படுகிறார். அதே போல் தன்னால் முடிந்தவரை, தொடர்ந்து பலருக்கு உதவி செய்து வருகிறார். இது குறித்த தகவல்களை அஜித் வெளியே ஒருபோதும் சொன்னது இல்லை என்றாலும்... அவர் உதவி செய்ததது பற்றி அறிந்த பல பிரபலங்கள் பேட்டிகளில் இந்த தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில் அஜித் பிரபல பத்திரிக்கையாளர் ஒருவருக்கு உதவி செய்த தகவலை பத்திரிகையாளர் பாண்டியன் தற்போது கூறியுள்ளார். அதாவது அஜித்துக்கு திருமணம் ஆகி இரண்டு வருடங்கள் ஆகியும், குழந்தை பிறக்காத நிலையில்... திரைச்சுவை என்கிற பத்திரிக்கை, அஜித் காதலித்து திருமணம் பண்ணிக்கிட்டாரு, ஆனால் இரண்டு மூன்று வருடமாக குழந்தையை இல்ல? அவருக்கு ஆண்மை இருக்கானு சந்தேகமா இருக்குதுன்னு எழுதி, அசிங்கப்படுத்தி இருந்தார். 

46 வயதில் சிம்பு பட இயக்குனருக்கு நடந்த 2-வது திருமணம்! ஹீரோயின் போல் இருக்கும் மணமகள் யார் தெரியுமா?

Ajith Help to Journalist

சில வருடங்களுக்கு பின் இந்த செய்தியை எழுதிய பத்திரிக்கையாளர் விஜயா மருத்துவமனையில் ஹார்ட் அட்டாக் காரணமாக அட்மிட் ஆகி, 2.5 லட்சம் ரூபாய் ஆபரேஷனுக்கு கட்ட முடியாமல் தவித்துக் கொண்டிருந்த போது, இதுகுறித்து அறிந்த அஜித்... உடனடியாக அங்கு விரைந்து வந்து, அந்த பணத்தை கட்டி உள்ளார். அப்போது அவரிடம் PRO எதுக்கு சார் என்பது போல் கேட்க, "அஜித் இந்த நேரத்தில் நாம் அவரை பழிவாங்க கூடாது. வலுவாக இருக்கும்போது நாம் சண்டை பிடிக்கலாம். ஒரு நிருபர் வலுவிழந்து ஹாஸ்பிடலில் போராடிக் கொண்டிருக்கிறார். அப்போ போய் நாம ஈகோ பார்த்துகிட்டு நிக்க கூடாது என்று சொல்லி உள்ளார். இந்த தகவலை தான் தற்போது பத்திரிக்கையாளர் பாண்டியன் கூறியுள்ள நிலையில் அது வைரல் ஆகி வருகிறது.

மேலும் அஜித் திரையுலகை சேர்ந்த பலருக்கு ஏராளமான உதவிகளை செய்துள்ளார். குறிப்பாக தன்னுடைய வீட்டில் பணியாற்றும் வேலைக்காரர்களுக்காக சென்னையில் நிலம் வாங்கி 12 வீடுகள் கட்டிக் கொடுத்துள்ளார். அவர்கள் வந்து செல்லவும், பிரத்தேயாக வேன் வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 

Latest Videos

click me!