மிரளவைக்கும் டாப் 5 தமிழ் Horror மூவிஸ் - OTTயில் இருக்கு மிஸ் பண்ணாம பாருங்க!

First Published | Nov 12, 2024, 5:57 PM IST

Horror Movies in OTT : திகில் படங்கள் திரையரங்குகளில் வரும்போது சில ரசிகர்கள் அந்த படங்களை திரையரங்குகளில் சென்று பார்ப்பதில்லை.

Horror Movies

அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில், தம்பி தனுஷ் நடித்து சிறப்பான பல திரைப்படங்கள் வெளியாகி இருக்கிறது. ஆனால் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரிய வரவேற்பை பெறவில்லை என்றாலும் மிகச்சிறந்த திகில் திரைப்படமாக இப்போது வரை திகழ்ந்து வருகிறது கடந்த 2022 ஆம் ஆண்டு செல்வராகவன் மற்றும் யுவன் சங்கர் ராஜா காம்பினேஷனில் வெளியான "நானே வருவேன் என்கின்ற திரைப்படம். இந்த திரைப்படம் உலக அளவில் சுமார் 30 கோடி ரூபாய்க்கும் மட்டுமே வசூல் செய்ததாக கூறப்படுகிறது. கதிர் மற்றும் பிரபு என்கின்ற இரண்டு இரட்டையர்களுக்கு மத்தியில் நடக்கும் சுவாரசியமான கதைகளம் கொண்ட திரைப்படம் இது. இப்போது இந்த திரைப்படம் அமேசான் ப்ரைமில் உள்ளது. 

மஞ்சள் வீரன்; கூல் சுரேஷுக்கும் படத்துக்கும் சம்மந்தம் இல்லை - இயக்குனர் செல்அம் அதிரடி அறிவிப்பு!

Pizza 3

கடந்த 2012 ஆம் ஆண்டு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வெளியான திரைப்படம் தான் பீட்சா. அந்த மெகா ஹிட்டானது. பிரபல தயாரிப்பாளர் சி.வி குமார் இந்த திரைப்படத்தை தயாரித்து வழங்கியிருந்தார் அதன் பிறகு இப்போது வரை மூன்று பாகங்களாக இந்த திரைப்படம் வெளியாகி இருக்கிறது. இந்த மூன்று திரைப்படங்களுக்குமே தயாரிப்பாளர் குமார் தான் என்றாலும், மூன்று திரைப்படங்களும் மூன்று வெவ்வேறு இயக்குனர்களால் இயக்கப்பட்டது. கார்த்திக் சுப்புராஜூக்கு பிறகு பீட்சா 2 படத்தை தீபன் சக்கரவர்த்தி இயக்க, பீட்சா 3 திரைப்படத்தை மோகன் கோவிந்த் இயக்கியிருந்தார். முற்றிலும் மாறுபட்ட திகில் கலந்த படமாக இது இன்றளவும் விளங்கி வருகிறது. இந்த திரைப்படம் அமேசான் ப்ரைமில் தற்பொழுது உள்ளது.

Tap to resize

Aruvam

இயக்குனர் சாய் சேகர் இயக்கத்தில் பிரபல நடிகர் சித்தார்த், கேத்தரின் தெரேசா, ஹேமா ராஜ்குமார், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்து வெளியாகி மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற திரைப்படம் தான் அருவம். ஆக்ஷன் கலந்த திகில் திரைப்படமாக மக்கள் மத்தியில் இந்த திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படமும் இப்போது அமேசான் பிரைம் OTT தளத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Airaa

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில், கடந்த 2019 ஆம் ஆண்டு சர்ஜுன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் "ஐரா". நயன்தாரா, கலையரசன், யோகி பாபு மாற்றும் ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பல நடிகர்கள் இந்த திரைப்படத்தில் நடித்திருந்தனர். இப்படத்தில் இரட்டை வேடங்களில் நயன்தாரா அசத்தியிருந்தார். பலவிதமான எமோஷன்ஸ் கலந்த இந்த திரைப்படம் மிகச்சிறந்த ஹாரர் திரைப்படமாகவும் திகழ்ந்து வருகிறது. இப்போது அமேசான் ப்ரைமில் உள்ளது.

ஜான்வி கபூர் அந்த இடத்தை பெரிதாக்க அறுவை சிகிச்சை செய்தாரா? தீயாய் பரவும் புகைப்படம்!

Latest Videos

click me!