இந்த நான்கு வாரங்களும் நடுவராக அசத்தி வந்த விஜய் சேதுபதி மிகச்சிறந்த முறையில் செயல்பட்டு வந்ததாக கூறி வந்த ரசிகர்கள், கடந்த சில எபிசோடுகளாக ஒரு தலைப்பட்சமாக விஜய் சேதுபதி செயல்பட்டு வருவதாகவும், தனக்கு வேண்டியவர்களுக்கு நல்ல கமெண்ட்களையும், பிடிக்காதவர்களை வசைபாடியும் பேசி வருவதாக கூறுகின்றனர். மேலும் விஜய் சேதுபதி ஒரு நடுநிலையான மனிதராக இல்லாமல் இருப்பதாகவும் கூறி வருகின்றனர். ட்விட்டர் பக்கத்தில் கமலஹாசன் மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வர வேண்டும் என்கின்ற ஹேஷ்டேக்குகளும் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. ஆரம்ப காலகட்டத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கு மிகப்பெரிய வரவேற்பு இருந்த நிலையில், இப்போது அது படிப்படியாக குறைந்து வருவதாக நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர்.