அஜித்தை ஒரு கை பார்க்க முடிவு; விடாமுயற்சிக்கு வில்லனாக வரும் பாலா!

First Published | Nov 13, 2024, 9:43 AM IST

நடிகர் அஜித் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படம் வருகிற பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆக உள்ள நிலையில், அதற்கு வில்லனாக இயக்குனர் பாலா வந்துள்ளார்.

Ajith, Director Bala

பாலா இயக்கத்தில் கடைசியாக திரைக்கு வந்த படம் நாச்சியார். அப்படத்தின் ரிலீசுக்கு பின்னர் சுமார் 6 ஆண்டுகளாக அவர் இயக்கிய படம் ஒன்று கூட ரிலீஸ் ஆகவில்லை. நாச்சியார் படத்துக்கு விக்ரம் மகன் துருவ் விக்ரமை வைத்து பாலா வர்மா திரைப்படத்தை இயக்கினார். இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து விக்ரமுக்கு படம் திருப்தி அளிக்காததால் படம் அப்படியே கைவிடப்பட்டது. அப்படத்துக்கு பின்னர் நடிகர் சூர்யாவை வைத்து வணங்கான் படத்தை தொடங்கினார் பாலா.

Vanangaan

கடந்த 2022-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்படம் ஒருமாதம் ஷூட்டிங் முடிந்த பின் கைவிடப்பட்டது. பின்னர் சூர்யாவுக்கு பதில் அருண் விஜய்யை ஹீரோவாக போட்டு வணங்கான் படத்தை தொடங்கினார் பாலா. அப்படத்தை சுரேஷ் காமாட்சி உடன் இணைந்து பாலா தயாரித்தும் உள்ளார். ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகி உள்ளது. அதன்படி வருகிற 2025-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வணங்கான் படத்தை திரைக்கு கொண்டுவர பாலா முடிவெடுத்துள்ளாராம்.

இதையும் படியுங்கள்...அமரன் தந்த தெம்பு; தல அஜித்துடன் நேருக்கு நேர் மோதுகிறாரா சிவகார்த்திகேயன்? பிரபலம் பகிர்ந்த தகவல்!

Tap to resize

Ajith vs Bala

ஏற்கனவே நடிகர் அஜித்குமாரின் விடாமுயற்சி படமும் வருகிற பொங்கல் பண்டிகைக்கு தான் ரிலீஸ் ஆக உள்ள நிலையில், அதற்கு போட்டியாக வணங்கான் படத்தை ரிலீஸ் செய்ய பாலா முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே அஜித்துக்கும் இயக்குனர் பாலாவுக்கும் நான் கடவுள் பட விவகாரத்தில் பிரச்சனை ஏற்பட்டு இருவரும் சண்டை போட்டது பெரிய விவாதப் பொருளாக மாறியது. அப்படி இருக்கையில் முதன்முறையாக அஜித்துடன் நேருக்கு நேர் பாக்ஸ் ஆபிஸில் மோத முடிவெடுத்துள்ள பாலா அஜித்தை ஒரு கை பார்க்கும் ஐடியாவில் உள்ளாராம்.

Director Bala

அஜித்தின் விடாமுயற்சி மட்டுமல்ல பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கியுள்ள கேம் சேஞ்சர் திரைப்படமும் வருகிற பொங்கல் பண்டிகைக்கு தான் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த இரண்டு பிரம்மாண்ட படங்களுக்கு மத்தியில் தன்னுடைய வணங்கான் படத்தை ரிலீஸ் செய்யும் பாலாவின் முடிவு அவருக்கு கைகொடுக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். வணங்கான் படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்...விஜய்யும் இல்ல; ரஜினியும் இல்ல - அதிக ஹிட் படங்களை கொடுத்த ஹீரோ யார் தெரியுமா?

Latest Videos

click me!