"உங்க வேலையை பாருங்க" ..கவர்ச்சி குறித்து சமந்தாவின் பளார் பதில்

First Published Mar 16, 2022, 12:32 PM IST

சமந்தா சமீபத்தில் மிக கவர்ச்சியாக உடை அணிந்து போஸ் கொடுத்திருந்தது மிகவும் வைரலானது. இது குறித்த விமர்சனங்களுக்கு அவர் சரியான பதில் அளித்துள்ளனர்.

samantha

குடும்ப குத்து விளக்காய் சமந்தா :

தமிழ் தெலுங்கு என மாஸ் கட்டி வந்த சமந்தா பிரபல நடிகர் முரளியின் மகன் அதர்வா அறிமுகமான பானகத்தாடி மூலம் அறிமுகமானார். அளவான கிளாமர் உடன் க்யூட் பெண்ணாக நடித்திருந்த சமந்தா இதையடுத்து ஈ படத்தில் அதேதோற்றத்தில் நடித்திருந்தார் சமந்தா.

samantha

பிரபல நடிகர்களுக்கு ஜோடியான சமந்தா :

தமிழில் முன்னணி நாயகர்களாக இருக்கும் விஜய், சூர்யா உள்ளிட்டவர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார் சமந்தா. விஜயின் தெறி, மெர்சல் என குடும்ப குலவிளக்கு கெட்டப்பில் நடித்திருந்தார்.

samantha

சமந்தா - நாகா சைதன்யா திருமணம் :

படங்களில் பிஸியாக இருந்த சமந்தா தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் படங்களில் நடித்து வந்தார் சமந்தா. 

மேலும் செய்திகளுக்கு... Samantha : இத்துணூண்டு டிரெஸ் இத்தனை லட்சமா..! சமந்தாவின் கவர்ச்சி ஆடை விலை தெரியுமா..?
 

samantha

உல்லாசமாக சுற்றிய காதல் ஜோடி : 

சமந்தா - நாக சைதன்யா ஜோடி மிகவும் மகிழ்ச்சி கரமாக உலா வந்தனர். அவ்வப்போது அவர்களின் சுற்றுலா புகைப்படங்கள் வெளிவந்த வண்ணம் இருந்தன. இந்த புகைப்படங்கள் வைரலாகியது.

Samantha

குழந்தை ஆசையில் சமந்தா :

திருமணமாகி மகிழ்ச்சியாக இருந்த நட்சத்திர  தம்பதிகள் குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்துள்ளதாக தகவல் பரவியது. அதோடு இந்த விசேஷத்திற்காக சமந்தா படங்களிலிருந்தும் விளக்கவுள்ளதாக கூறப்பட்டது. 

Samantha

திடீர் விவாகரத்து :

இவ்வாறு இருக்க திடீரென சமந்தா - நாக சைதன்யா பிரியப்போவதாக சமூக வலைத்தளத்தில் அறிவித்தனர். அதோடு கணவர் தரப்பில் இருந்து கொடுத்த ஜீவனாம்சத்தையும் சமந்தா மறுத்து விட்டு ஒதுங்கி கொண்டார்.

மேலும் செய்திகளுக்கு... சமந்தாவை மீட்ட வருண் தவான்..மெல்லிய புன்னகையால் நன்றி சொன்ன நாயகி

samantha

விவாகரத்துக்கு பின் டாப்புக்கு சென்ற சமந்தா :

கணவரை பிரிந்த சோகத்தில் இருந்த சமந்தா பின்னர் மீண்டும் புது பொலிவுடன் படங்களில் தோன்றினார். அதோடு கிளாமருக்கு அதிகமானது.

samantha

துணிச்சலுடன் சமந்தா :

முன்பை விட அதிக மனா உறுதியும், உடல் வலிமையுமாக மிளிர்ந்த சமந்தா செம ஹாட்டாக மாறிவிட்டார். இவர் சமீபத்தில் புஷ்பா படத்தில் போட்டிருந்த ஆட்டம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

samantha

கவர்ச்சி கொஞ்சும் உடையில் சமந்தா :

சமீபத்தில் ’கிரிட்டிக்ஸ் சாய்ஸ் அவார்ட்ஸ்’ என்ற சினிமா விருது வழங்கும் விழாவிற்கு வந்த சமந்தா. செம கிளாமரை பரப்பி வந்தார்.  கவர்ச்சி தூக்கலான ஆடை அணிந்து அனைவரையும் வாய்பிளக்க வைத்திருந்தார்.

samantha

கிளாமர் உடை  குறித்த கேள்விக்கு சமந்தா பளார் பதில் : 

இந்த கிளாமர் உடை குறித்த எக்கசக்க கமெண்ட்ஸ் எழுந்து வருகிறது. இதுகுறித்த மோசமான விமர்சனங்களுக்கு பதிலளித்துள்ள சமந்தா..’நாம் 2022-ல் இருக்கிறோம் .பெண்கள் அணையும் உடையை வைத்து எடை போடுவதை விடுத்து உங்கள் வேலையை பாருங்கள் என கூறியுள்ளார்.

click me!