எத்தனையோ வில்லன் நடிகர்கள் வந்தாலும், அவர்களின் மிகவும் தனித்தன்மை வாய்ந்தவராக பார்க்கப்படுபவர் தான் எம்.என். நம்பியார். இவரின் நடிப்பு திறமையை பார்த்து வியர்ந்து தான், எம்.ஜி.ஆர் தனக்கு நிகரான வில்லன் என அவரையே பல படங்களின் நடிக்க வைத்தார்.
M N nambiar
அப்படி அந்த காலத்தில், எம்.ஜி.ஆருக்கு வில்லனாக நடித்ததால்... பலரது கோப தாபங்களுக்கு ஆளானவர் தான் நம்பியார். கைகளை அரக்கிகொண்டு, முக பாவனையால் கூட வில்லத்தனத்தை நேர்த்தியாக வெளிப்படுத்த தெரிந்த மஹா கலைஞன்... நம்பியார் எப்படி இந்த சினிமா திரைக்குள் வந்தார் தெரியுமா?
இவர்களுக்கு ஏன் நாம் பாரமாக இருக்க வேண்டும் என்று எண்ணிய அந்த நம்பியார், நவாப் ராஜமாணிக்கம்பிள்ளை என்பவரின் நாடகக்குழுவில் சேர்ந்தார். ஆனால் அந்த நாடகக்குழுவில் அவர் நடிகராக சேரவில்லை. அங்குள்ள நடிகர்களுக்கு சமைத்துப்போடும் சமையல்காரரின் உதவியாளராக பணிபுரிந்தார். மூன்று வேளையும் சாப்பாடும் கிடைத்ததே தவிர சம்பளம் என எதுவும் கிடைக்கவில்லை.
“ராமதாஸ்” என்று ஒரு நாடகத்தை அந்த நாடக்குழு அரங்கேறியது. அந்த நாடகத்தை படமாக்கவேண்டும் என்று ஒரு தயாரிப்பாளர் நவாப் ராஜமாணிக்கம்பிள்ளையை அணுகினார். அப்போது ராஜமாணிக்கம்பிள்ளை “தாராளமாக படமாக்குங்கள். ஆனால் இந்த நாடகத்தில் நடித்த நடிகர்களைத்தான் அந்த படத்திலும் நடிக்க வைக்க வேண்டும்” என்று கூறினாராம். அந்த நாடகத்தில் நம்பியாரும் நடித்திருந்ததால் அவருக்கு அத்திரைப்படத்திலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.