பொதுவாக குழந்தைகளுக்கு நினைவு தெரியும் வயது வந்துவிட்டால் பெற்றோர் மீண்டும் குழந்தை பெற்றுக் கொள்வதை தவிர்த்து விடுவது வழக்கம். ஆனால், வெளிநாடுகளில் பிள்ளைகள் கல்லூரி படிக்கும் போது கூட குழந்தை பெற்றுக் கொள்வது வழக்கம்.
மலையாள சீரியல் நடிகையான ஆர்யா பார்வதிக்கு 23 வயது ஆகும் நிலையில், இவருடைய தாயாருக்கு தற்போது 47 வயதில் இரண்டாவது குழந்தையை பெற்றெடுத்துள்ளார். முதல் குழந்தையோடு போதும் என நிறுத்திக்கொண்டு அவருடைய பெற்றோர், சுமார் 23 வருடங்கள் கழித்து இரண்டாவது குழந்தைக்கு பெற்றோராகி உள்ளனர்.
இந்நிலையில், ஆர்யா பார்வதியின் தாயார் திடீர் என தந்நடுய்ய 47 வயதில் கற்பமாகியுள்ளார். ஆரம்பத்தில் கர்ப்பமானது தெரியாமல் இருந்த இவருக்கு, சில மாதங்கள் கழித்து தான் கர்ப்பம் தரித்த தகவலே தெரியவந்துள்ளது. திருமண வயதில் மகள் உள்ளதால், அவரிடம் இதை சொல்ல முடியாமல்... ஒரு பக்கம் தவித்தாலும், குழந்தையை பெற்றுக்கொள்ள வேண்டும் என்கிற அசையும் இருந்தது.
ஆர்யா பார்வதி, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில்... தாயும் குழந்தையும் நலமுடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். குழந்தையை கையில் ஏந்தியபடி கொஞ்சும் வீடியோ ஒன்றாயும் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார். இதைத்தொடர்ந்து ரசிகர்கள் பலர் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.