தமிழ் மற்றும் தெலுங்கு திரை உலகில், முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமான நடிகை சமந்தா தற்போது பாலிவுட் மற்றும் ஹாலிவுட் பட வாய்ப்புகளையும் கைப்பற்றி நடிக்க துவங்கி விட்டார். இவரின் இந்த அசுர வளர்ச்சிக்கு காரணம் நடிப்பின் மீது இவருக்கு உள்ள அர்ப்பணிப்பு எனலாம்.
தன்னுடைய முதல் பட ஹீரோவானாக நாக சைதன்யாவுடன் ஏற்பட்ட நட்பு, பின்னர் காதலாகவும் மாறியது. இருவரும் அவ்வப்போது டேட்டிங் செய்து வந்த நிலையில், சுமார் ஏழு வருடங்கள் உருகி உருகி காதலித்து வந்த சமந்தா பெற்றோர் சம்மதத்துடன் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார்.
பின்னர் கடந்த 2021 ஆம் ஆண்டு, திடீரென தன்னுடைய கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவருமே தங்களுடைய விவாகரத்து முடிவை அறிவித்து அதிர்ச்சி கொடுத்தனர். இது சமூக வலைதளத்தில் மிகப்பெரிய விவாதங்களுக்கு ஆளான நிலையில், சில மாதங்கள் விவாகரத்து காரணமாக ஏற்பட்ட மன உளைச்சலில் இருந்த சமந்தா, ஆன்மீக பயணம் மற்றும் தன்னை தொழில் ரீதியாக பிசியாக வைத்து கொண்டார்.
அதன்படி, தற்போது நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடிக்கும் குஷி மற்றும் பாலிவுட் தொடரான சீட்டாடல் போன்ற வற்றில் நடித்து சமந்தா நடித்து வருகிறார்.
அதில் இது உலகத்திற்கு காயமாக தெரியலாம், ஆனால் நாங்கள் இதை நகைகள் போன்று நினைப்பதாக பதிவித்துள்ளார். சமந்தா அர்ப்பணிப்போடு கூறியுள்ள வார்த்தை ரசிகர்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது. மேலும் பலரும் சமந்தாவை பாராட்டி வருகிறார்கள்.