விக்ரம் நடிப்பில் நீண்ட நாட்களாக ரிலீஸ் ஆகாமல் முடங்கிக் கிடக்கும் திரைப்படம் துருவ நட்சத்திரம். கடந்த 2017-ம் ஆண்டு பெரும்பாலான ஷூட்டிங் எடுத்து முடிக்கப்பட்ட இப்படம் பல்வேறு பிரச்சனைகளில் சிக்கியதால் கிடப்பில் போடப்பட்டது. கவுதம் மேனன் இயக்கியுள்ள இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ், ரித்து வர்மா ஆகியோரு நடித்துள்ளனர். மேலும் ராதிகா, டிடி என மிகபெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து உள்ளார்.