தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90களில் முன்னணி நடிகையாக இருந்தவர் குஷ்பு. முதல் முதலில் ரசிகர்கள் சேர்ந்து ஒரு நடிகைக்கு கோவில் கட்டினார்கள் என்றால் அதுவும் இவருக்கு தான். நடிப்பை தாண்டி அரசியலிலும் ஆதிக்கம் செலுத்தி வரும் குஷ்பு ஏற்கனவே காங்கிரஸ் கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த நிலையில், அதிலிருந்து விலகி பாஜக கட்சியில் இணைந்தார்.
இதையடுத்து பாஜகவில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக குஷ்புவின் பெயர் பரிந்துரை செய்யப்பட்ட நிலையில், தற்போது அதற்கான பதவி வழங்கப்பட்டுள்ளது. இதை அடுத்து பல்வேறு பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள், குஷ்புவிற்கு சமூக வலைதள மூலம் தொடர்ந்து தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "எனது தலைவர் நரேந்திர மோடி அவர்களின் ஆசியோடும், ஷர்மா ரேகா ஆசியோடும் இந்த பெரிய பொறுப்பை ஏற்றுக் கொள்கிறேன். பெண்களின் நலன்கள் அனைத்து துறையிலும் பாதுகாக்கப்பட உங்கள் அனைவரின் பிரார்த்தனைகளையும், ஆதரவுகளையும், நான் விரும்புகிறேன் என கூறி சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.