Kamalhaasan: முக ஸ்டாலின் புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்து... அரிய புகைப்படங்களை பார்வையிட்ட கமல்!

First Published | Feb 28, 2023, 7:35 PM IST

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்த நாளை ஒட்டி, சென்னையில் நடைபெறும் புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்த கமல்ஹாசன். இதுகுறித்து புகைப்பட தொகுப்பு இதோ..
 

மறைந்த முதலமைச்சர் கலைஞர் நிதியின் அரசியல் வாரிசாக இருக்கும், திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று தன்னுடைய 70-ஆவது பிறந்தநாளை நாளை கொண்டாட உள்ளார்.

இவரின் பிறந்தநாளை முன்னிட்டு, திமுகாவை சேர்ந்த தொண்டர்கள் தமிழகம் முழுவதும் ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்ய ஏற்பாடு செய்துள்ளனர். மேலும் அன்னதானம், கோவில்களில் சிறப்பு ப்ரார்தனைகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

23 வயது சீரியல் நடிகையின் அம்மாவுக்கு குழந்தை பிறந்தது..! உச்சகட்ட மகிழ்ச்சியில் குடும்பம்..!

Tap to resize

மேலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் புகைப்படங்களை தொகுத்து ராஜா அண்ணாமலை மன்றத்தில் புகைப்பட கண்காட்சி நடத்த திட்டமிடப்பட்ட நிலையில், அதனை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனிடம் இன்று திறந்து வைத்தார்.

முதல்வர் முக ஸ்டாலின் சிறு வயது புகைப்படம், அவர்  அரசியலில் அடியெடுத்து வைத்தபோது கலைஞர் அவர்களுடன் எடுத்து கொண்ட பல அரிய புகைப்படங்களை பார்வையிட்ட கமல்ஹாசன்.

அரசியல் பதவி கிடைத்ததும்... செம்ம கெத்தாக நடிகை குஷ்பு வெளியிட்ட புகைப்படம்..! வைரலாகும் கலக்கல் போட்டோஸ்..!

அங்கு வைக்கப்பட்டிருந்த பார்வையாளர் பதிவேட்டில், முதல்வர் முக ஸ்டாலின் குறித்து ' மாபெரும் தலைவரின், தந்தையின் மகனாக, தொண்டனாக, இருக்கும் சந்தோஷத்தையும்.. சவாலையும்... அனுபவித்தவர், ஏற்றவர், அவரின் படிப்படியான உயர்வை படம் பிடிக்க வேண்டியது சரித்திர அவசியம் என நெகிழ்ச்சியுடன் எழுதினர்.

இந்த் பதிவு தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் கமல்ஹாசன் புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டபோது அவருடன் அமைச்சர் சேகர் பாபு மற்றும் மேயர் ப்ரியா ஆகியோர் உடன் இருந்தனர். இதுகுறித்த புகைப்படங்களும் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

நடுரோட்டில் ஆண் நபருடன் சண்டை போட்ட துணை நடிகை..! அத்துமீறியதாக பரபரப்பு குற்றச்சாட்டு..!

Latest Videos

click me!