
நடிகை ரம்யா பாண்டியன் திருமணத்தை தொடர்ந்து, அவருடைய தம்பி பரசு பாண்டியனுக்கு தற்போது திருமண ஏற்பாடுகள் பரபரப்பாக நடந்து வருகிறது. இது குறித்து புகைப்படங்களை ரம்யா பாண்டியனே தன்னுடைய சமூக வலைதளத்தில் வெளியிட்டு அறிவித்துள்ளார்.
'டம்மி டப்பாசு' என்கிற திரைப்படத்தின் மூலம், கதாநாயகியாக அறிமுகமானவர்தான் ரம்யா பாண்டியன். இவருடைய சித்தப்பா அருண்பாண்டியன், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் - தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார். அதைப்போல் ரம்யா பாண்டியனின் தந்தையும் திரைப்பட பின்னணியை சார்ந்தவர் தான். சில திரைப்படங்களை தயாரித்துள்ள ரம்யா பாண்டியனின் தந்தை, ஒரு சில படங்களை இயக்கியும் உள்ளார். இவர் இயக்கிய - தயாரித்த படங்கள் தோல்வியை தழுவிய நிலையில், பெருத்த நஷ்டம் ஏற்பட்டது. சொந்த ஊரான திருநெல்வேலிக்கே சென்று குடும்பத்தோடு செட்டிலானார்.
கடற்கரையில் ஹாட் உடையில் பிறந்தநாள் கொண்டாடிய நடிகை திவ்யபாரதி!
திருநெல்வேலியில் பல ஏக்கர் கணக்கில் இவருக்கு நிலங்கள் இருந்த நிலையில், விவசாயத்தில் ஆர்வம் காட்டினார். அந்த சமயத்தில் தான் விஷ வண்டு கடித்து சிகிச்சை பலனின்றி துரைப்பாண்டியன் இறந்தார். அவர் இறக்கும்போது, ரம்யா பாண்டியன் அவருடைய சகோதரி மற்றும் சகோதரன் என அனைவருமே சிறு பிள்ளைகள் தான்.
3 பிள்ளைகளையும் தனி ஆளாக வளர்த்து வந்த சாந்தி துரை பாண்டியன்... அவர்களின் படிப்புக்காக மீண்டும் சென்னைக்கு வரும் சூழ்நிலை உருவானது. ரம்யா பாண்டியனின் சித்தப்பா அருண்பாண்டியன் தான், அப்பா ஸ்தானத்தில் இருந்து இவர்களின் குடும்பத்திற்கு இதுநாள் வரை பல உதவிகளை செய்து வருகிறார். இது பற்றி அண்மையில் சாந்தி துரைபாண்டியன் கூறி இருந்தார்.
ஜனவரி 31ந் தேதி தியேட்டர் & OTTயில் போட்டிபோட்டு ரிலீசாகும் தமிழ் படங்கள் லிஸ்ட் இதோ
எனினும் ரம்யா பாண்டியன் அவரிடம் சென்று தனக்கான பட வாய்ப்புகளையோ - சிபாரிசோ கேட்டு என்றுமே நின்றது இல்லை. தனக்கான வாய்ப்பை தானே தேடிக் கொள்ள வேண்டும் என்பதில் குறியாக இருந்த ரம்யா பாண்டியன். இவர் கதாநாயகியாக அறிமுகமான 'டம்மி டப்பாசு' திரைப்படம் தோல்வியை தழுவினாலும், இதைத் தொடர்ந்து வெளியான 'ஜோக்கர்' திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இவருக்கு வரவேற்பை பெற்று தந்தது.
ஆனால் இதைத்தொடர்ந்து தேர்வு செய்து இவர் நடித்த படங்கள், இவருக்கு கை கொடுக்காமல் போனது. தனக்கான வாய்ப்பை, வெள்ளித்திரையைத் தாண்டி சின்னத்திரையிலும் தேடத் துவங்கினார் ரம்யா பாண்டியன். அவ்வப்போது சமூக வலைதளத்தில் ஹாட் போட்டோ ஷூட் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இவர், அதிரடியாக விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்கிற சமையல் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு சமையல் திறமையை வெளிப்படுத்தினார்.
ஓட்டப்பந்தயத்தில் சிங்கம் போல் சீறிப்பாய்ந்த அஜித் மகன்; 3 தங்க மெடல்கள் வென்று அசத்தல்
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் பைனல் வரை வந்தாலும், இவரால் டைட்டில் வெல்ல முடியாமல் போனது. இதன் பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சிகளும் அதிரடியாக களமிறங்கினார். முதல் நாளில் இருந்தே மிகவும் தெளிவாக தன்னுடைய விளையாட்டை விளையாடின ரம்யா பாண்டியன் மீண்டும் பைனல் வரை வந்து விருதை தவறவிட்டார். இதைத்தொடர்ந்து பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு விளையாடிய ரம்யா பாண்டியனுக்கு இரண்டாவது ரன்னர் அப்பாக மாறினார்.
திரைப்பட வாய்ப்புகள் சரியாக கிடைக்காததால், ஆன்மீக சுற்றுலா செல்வதில் ஆர்வம் காட்டிய ரம்யா பாண்டியனுக்கு, அதுதான் காதல் வர காரணமாக அமைந்தது. யோகா பயிற்சி எடுக்க ரிஷிகேஷுக்கு சென்ற போது, அங்கு யோகா பயிற்சியாளராக இருந்த லவல் தவானை காதலிக்க துவங்கினார். இதைத் தொடர்ந்து குடும்பத்தினர் சம்மதத்துடன் லவல் தவானை கடந்த நவம்பர் 8-ஆம் தேதி கங்கை நதிகாரியில் உள்ள கோவிலில் கரம்பிடித்தார். இவர்களுடைய திருமணம் கோவிலில் நடந்ததால் மிகவும் எளிமையாகவே நடந்தது.
சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' புதிய போஸ்டருடன் வெளியான அப்டேட்!
இதைத் தொடர்ந்து சென்னையில் பிரமாண்ட ரிசப்ஷன் ஒன்றையும் நடத்தினர். இதில் ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டு இந்த தம்பதிகளை வாழ்த்தினார். திருமணத்தை தொடர்ந்து தன்னுடைய ஹனிமூன் கொண்டாட்டத்தை தாய்லாந்து நாட்டில் கொண்டாடிய ரம்யா பாண்டியன், பொங்கல் திருவிழாவை தன்னுடைய அம்மா வீட்டில் கொண்டாடி மகிழ்ந்தார்.
இதைத் தொடர்ந்து சென்னையில் பிரமாண்ட ரிசப்ஷன் ஒன்றையும் நடத்தினர். இதில் ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டு இந்த தம்பதிகளை வாழ்த்தினார். திருமணத்தை தொடர்ந்து தன்னுடைய ஹனிமூன் கொண்டாட்டத்தை தாய்லாந்து நாட்டில் கொண்டாடிய ரம்யா பாண்டியன், பொங்கல் திருவிழாவை தன்னுடைய அம்மா வீட்டில் கொண்டாடி மகிழ்ந்தார்.
யார் இந்த தங்கப்புள்ள? பிக் பாஸ் 8 மூலம் மக்கள் மனதை வென்ற இந்த நடிகை யாருன்னு தெரியுதா?
அவ்வப்போது தன்னுடைய வாழ்க்கையில் நடக்கும் இனிமையான தருணங்கள் குறித்து சமூக வலைதளத்தில் பகிர்ந்து கொள்வதை வழக்கமாக வைத்திருக்கும் ரம்யா பாண்டியன், வீட்டில் நடக்கும் அடுத்த திருமணம் பற்றிய தகவலை வெளியிட்டுள்ளார். ரம்யா பாண்டியனின் சகோதரர் பரசுவுக்கு இன்னும் சில தினங்களில் திருமணம் நடைபெற உள்ளதாம். இதற்கான ஏற்பாடுகளில் குடும்பத்தினர் முழு வீச்சியில் இறங்கியுள்ளனர். இன்றைய தினம் பந்தக்கால் நட்டு பரசுவுக்கு முதல் நாள் நலங்கு வைக்கப்பட்டுள்ளது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை ரம்யா பாண்டியன் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். ரசிகர்கள் பலர் பரசுவின் திருமணத்திற்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ரம்யா பாண்டியனுக்கு தாலி பிரித்து கோர்ப்பதற்கு முன்பே பரசுவுக்கு தற்போது திருமணம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.