கடற்கரையில் ஹாட் உடையில் பிறந்தநாள் கொண்டாடிய நடிகை திவ்யபாரதி!
நடிகை திவ்ய பாரதி, தன்னுடைய 33 வது பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை, சமூக வலைதளத்தில் பகிர்ந்து கொண்டுள்ள நிலையில், அவை வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
நடிகை திவ்ய பாரதி, தன்னுடைய 33 வது பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை, சமூக வலைதளத்தில் பகிர்ந்து கொண்டுள்ள நிலையில், அவை வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
தமிழ் சினிமாவில் இளம் நடிகைகளில் ஒருவராக இருக்கும் திவ்ய பாரதி, மிகக் குறுகிய காலத்தில் ரசிகர்கள் மனதில் அதிக தாக்கத்தை ஏற்படுத்திய ஹீரோயின்களில் ஒருவராக உள்ளார். கோயம்புத்தூர் பெண்ணான திவ்ய பாரதி மாடலிங் துறையில் கால் பதித்த பின்னர், 2021 ஆம் ஆண்டு ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான 'பேச்சுலர்' திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.
சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் வெளியான இந்த படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, முதல் படத்திலேயே வெற்றி பட நாயகியாக அறியப்பட்டார். இந்த படத்தை தொடர்ந்து, தமிழ் சினிமாவில் வெற்றியை கொடுக்கக்கூடிய படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார்.
54 வயது வரை திருமணம் செய்து கொள்ளாதது ஏன்? தளபதி ஹீரோயின் கொடுத்த விளக்கம்!
கடந்த ஆண்டு ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்த 'மகாராஜா' திரைப்படத்திலும் விஜய் சேதுபதி மனைவியாக நடித்திருந்தார். சில நிமிடங்கள் மட்டுமே இவரது காட்சிகள் படத்தில் இடம்பெற்றாலும், இவரின் கதாபாத்திரம் மனதில் இடம் பிடிக்கும் விதத்தில் இருந்தது.
தற்போது மதில் மேல் காதல், ஆசை, என அடுத்தடுத்த இரண்டு படங்கள் திவ்ய பாரதியின் கை வசம் உள்ளது நடித்த வருகிறார். 'மதிமேல் காதல்' படத்தில் பிக் பாஸ் டைட்டில் வின்னர் முக்கின் ராவுக்கு ஜோடியாக திவ்யபாரதி நடித்து வருகிறார். இந்த படத்தை 'வெப்பம்' படத்தின் இயக்குனர் அஞ்சனா இயக்கி வருகிறார். அதேபோல் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக, பேச்சிலர் படத்தை தொடர்ந்து கிங்ஸ்டன் படத்திலும் திவ்யபாரதி நடித்த வருகிறார்.
6 ஆண்டுகளுக்கு பிறகு திரைக்கு வரும் படவா! விஷால் போல் விமல் சாதனை படைப்பாரா?
இந்த திரைப்படத்தின் படபிடிப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்துவிட்ட நிலையில், விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது. மேலும் கடலில் எடுக்கப்படும் முதல் அட்வென்ச்சர் ஃபேண்டஸி திரைப்படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்ஸ்ட்டா கிராம் பக்கத்தில் தனக்கென மிகப் பெரிய ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருக்கும் திவ்யபாரதி, அடிக்கடி தன்னுடைய விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வங்கியில் நேற்று தன்னுடைய 33 வது பிறந்த நாளை கொண்டாடிய திவ்யபாரதி, வெள்ளை நிற ஹாட் ஹாட் உடையில் கடற்கரையில் கையில் கேக்குடன் தேவதை போல் நிற்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. அதெ போல் ரசிகர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை இவருக்கு தெரிவித்து வருகின்றனர்.
தேடி வந்த ரஜினிகாந்த் பட வாய்ப்பு; இயக்க மறுத்த முன்னணி ஹீரோ - யார் தெரியுமா?