2025-ம் ஆண்டு இப்போது தான் தொடங்கியது போல் இருந்தது. ஆனால் அதற்குள் ஒரு மாதம் நிறைவடைய உள்ளது. ஜனவரி மாதத்தில் நிறைய புதுப்படங்கள் போட்டிபோட்டு வந்தாலும் இந்த வார இறுதியில், அதாவது ஜனவரி 31ந் தேதி பெரிய பட்ஜெட் படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகவில்லை. இதற்கு காரணம் அடுத்த வாரம் அஜித் நடித்த விடாமுயற்சி திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. அதனால் இந்த வாரம் முழுக்க சிறு பட்ஜெட் படங்கள் தான் ரிலீஸ் ஆக உள்ளன. அது என்னென்ன படங்கள் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
25
ராஜபீமா
பிக் பாஸ் தமிழ் சீசன் 1 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான ஆரவ், நாயகனாக நடித்த படம் ராஜ பீமா. கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக ரிலீஸ் ஆகாமல் கிடப்பில் போடப்பட்டிருந்த இப்படம் வருகிற ஜனவரி 31ந் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்தில் ஆஷிமா நர்வால், யாஷிகா ஆனந்த் ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர். நடிகை ஓவியாவும் இப்படத்தில் கேமியோ ரோலில் நடித்திருக்கிறார். இப்படத்தை நரேஷ் சம்பத் இயக்கி உள்ளார்.
35
தருணம்
அரவிந்த் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் கிஷன் தாஸ் நாயகனாக நடித்த படம் தருணம். இப்படத்தில் ஸ்மிருதி வெங்கட் நாயகியாக நடித்திருக்கிறார். இப்படம் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆவதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் தியேட்டர் கிடைக்காததால் பொங்கல் ரேஸில் இருந்து பின்வாங்கியது. இந்நிலையில், தற்போது ஜனவரி 31ந் தேதி தருணம் திரைப்படம் திரைக்கு வர உள்ளது. இப்படத்திற்கு தர்புகா சிவா இசையமைத்து உள்ளார்.
ஷக்திவேல் இயக்கியுள்ள படம் ரிங் ரிங். இப்படத்தில் விவேக் பிரசன்னா, டேனியல், சாக்ஷி அகர்வால் ஆகியோர் நடித்துள்ளனர். காதலிக்கும் போனை மாற்றினால் என்னென்ன பிரச்சனை வரும் என லவ் டுடே படத்தில் காட்டியதை போல், கல்யாணத்துக்கு பின் கணவனும் மனைவியும் போனை மாற்றிக் கொண்டால் என்ன நடக்கும் என்பதை நகைச்சுவை கலந்து சொல்லி இருக்கும் படம் தான் ரிங் ரிங். இப்படமும் ஜனவரி 31ந் தேதி ரிலீஸ் ஆகிறது.
55
ஜனவரி 31ந் தேதி ஓடிடியில் ரிலீசாகும் படங்கள்
ஓடிடியில் ஜனவரி 30ந் தேதி அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 திரைப்படம் ரிலீஸ் ஆகிறது. இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆக உள்ளது. அதேபோல் டொவினோ தாமஸ் ஜோடியாக திரிஷா நடித்த ஐடெண்டிட்டி திரைப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் ஜனவரி 31ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. மேலும் பயாஸ்கோப் திரைப்படம் ஆஹா ஓடிடி தளத்திலும், அசோக் செல்வன் நடித்த எமக்கு தொழில் ரொமான்ஸ் திரைப்படம் டெண்ட்கொட்டா ஓடிடி தளத்திலும் ஜனவரி 31 அன்று ரிலீஸ் ஆக உள்ளது.