நடிகர் விஜய்யின் கடைசி படம் ஜன நாயகன். இப்படத்தை எச்.வினோத் இயக்குகிறார். இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இவர்கள் இருவரும் ஜோடி சேரும் இரண்டாவது படம் இதுவாகும். இதற்கு முன்னர் பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா நடித்திருந்தார். மேலும் இப்படத்தில் நடிகர் விஜய்க்கு வில்லனாக பாலிவுட் நடிகர் பாபி தியோல் நடித்து வருகிறார். இப்படத்தை கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரித்து வருகிறது.
24
ஜன நாயகன் அப்டேட்
ஜன நாயகன் திரைப்படத்தில் கெளதம் மேனன், பிரகாஷ் ராஜ், பிரியாமணி, மமிதா பைஜு, டிஜே அருணாச்சலம் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் ஒளிப்பதிவாளராக சத்யன் சூரியன் பணியாற்றி வருகிறார். அதேபோல் படத்தொகுப்பு பணிகளை பிரதீப் இ ராகவ் மேற்கொள்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த நான்கு மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஜன நாயகன் திரைப்படத்தை இந்த ஆண்டு அக்டோபர் மாதம் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டிருந்த படக்குழு, தற்போது அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு இப்படத்தை ரிலீஸ் செய்யும் ஐடியாவில் உள்ளனர். இப்படத்தின் ஷூட்டிங்கே இன்னும் முடியாத நிலையில், அதற்குள் வசூல் வேட்டையை ஜன நாயகன் திரைப்படம் தொடங்கி உள்ளது. அதன்படி இப்படத்தின் வெளிநாட்டு ரிலீஸ் உரிமை பெரும் தொகைக்கு விற்பனை ஆகி உள்ளதாம்.
44
வசூல் வேட்டை தொடங்கிய ஜன நாயகன்
அந்த வகையில் ஜன நாயகன் திரைப்படத்தின் ஓவர்சீஸ் ரைட்ஸ் ரூ.75 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டு இருக்கிறதாம். இதுவரை எந்த ஒரு தமிழ் படமும் இவ்வளவு பெரிய தொகைக்கு விற்பனை ஆனதில்லை. முன்னதாக நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த கோட் திரைப்படம் ரூ.53 கோடிக்கு விற்பனை ஆகி இருந்த நிலையில், அதைவிட 22 கோடி கூடுதலாக ஜன நாயகன் திரைப்படத்தின் ஓவர்சீஸ் ரைட்ஸ் விற்பனை ஆகி உள்ளது. இது நடிகர் விஜய்யின் கடைசி படம் என்பதால் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.