
ஐஸ்வர்யா மேனன், இவரது பெயரை பார்த்ததும் கேரளா பெண் என நீங்கள் நினைக்கலாம். ஆனால் இவர் பக்கா தமிழ் பொண்ணு. பிறந்து வளர்ந்தது எல்லாம் ஈரோட்டில் தான். கல்லூரி படிப்பை சென்னையில் முடித்த ஐஸ்வர்யா, பின்னர் மாடலிங் துறையில் காலடி எடுத்து வைத்தார். சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆசையில் ஆரம்பத்தில் தீயா வேலை செய்யணும் குமாரு, காதலில் சொதப்புவது எப்படி போன்ற படங்களில் சைடு ரோலில் நடித்தார்.
இதையடுத்து வீரா என்கிற தமிழ் படம் மூலம் நாயகியாக அறிமுகமானார். அப்படத்தில் நடிகர் கிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடித்த இவர், அடுத்ததாக தமிழ் படம் இரண்டாம் பாகத்தில் மிர்ச்சி சிவா உடன் ஜோடி சேர்ந்தார். நடிகை ஐஸ்வர்யா மேனனுக்கு திருப்புமுனையாக அமைந்த படம் நான் சிரித்தால். சுந்தர் சி தயாரிப்பில் உருவான அப்படத்தில் நடிகர் ஹிப்ஹாப் ஆதிக்கு ஜோடியாக நடித்திருந்தார் ஐஸ்வர்யா மேனன்.
இதையும் படியுங்கள்... Iswarya : ஸ்லீவ்லெஸ் பிளவுஸ்.. கிறங்கடிக்கும் போஸ்.. பூவென மலர்ந்து நிற்கும் ஐஸ்வர்யா மேனன் - கூல் பிக்ஸ்!
பின்னர் அசோக் செல்வன் ஜோடியாக வேழம் படத்தில் நடித்த ஐஸ்வர்யா மேனன், ஸ்பை என்கிற படம் மூலம் தெலுங்கு திரையுலகிலும் காலடி எடுத்து வைத்தார். தற்போது தமிழில் இவர் கைவசம் பட வாய்ப்புகள் எதுவும் இல்லாவிட்டாலும் மலையாளத்தில் மம்முட்டி, கெளதம் மேனன் நடிப்பில் உருவாகும் பசூகா திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ஐஸ்வர்யா மேனன். இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.
இவர் சினிமா மட்டுமின்றி சின்னத்திரை தொடரிலும் நடித்திருக்கிறார். குறிப்பாக சன் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் டூப்பர் ஹிட் சீரியலான தென்றல் தொடரில் ஸ்ருதி என்கிற கேரக்டரில் நடித்திருந்தார் ஐஸ்வர்யா மேனன். சினிமாவை தாண்டி போட்டோஷூட் நடத்துவதிலும் அதிக ஆர்வம் கொண்ட ஐஸ்வர்யா மேனன், வித விதமான ஆடைகளில் போட்டோஷூட் நடத்தி அதை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
அந்த வகையில் தற்போது தாவணியில் பக்கா தமிழ் பெண்ணாக ஜொலிக்கும் ஐஸ்வர்யா மேனனி லேட்டஸ்ட் போட்டோஷூட் பார்த்த ரசிகர்கள் அவரின் அழகை வர்ணித்து வருகின்றனர். தாவணி போட்ட தீபாவளி என ஐஸ்வர்யாவின் அழகை பார்த்து ஐஸ் போல் உருகி உருகி கமெண்ட் செய்து வருகிறார்கள். ஐஸ்வர்யா மேனனின் இந்த அழகிய புகைப்படங்களுக்கு இன்ஸ்டாவில் லைக்குகளும் குவிந்த வண்ணம் உள்ளன.
இதையும் படியுங்கள்... Actress Iswarya Menon : லோ ஹிப் சேலை.. கூடுதல் அழகில் இளசுகளை ஈர்க்கும் ஐஸ்வர்யா மேனன் - ஹாட் பிக்ஸ் இதோ!