
தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகும் அனைவருமே, தங்களுடைய முதல் படத்திலேயே வெற்றியை பதிவு செய்வதில்லை. ஆனால் ஒரு சில இயக்குனர்கள் மட்டுமே, ரசிகர்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும் திரைப்படங்களை இயக்குகின்றனர். அந்த வகையில் கோலமாவு கோகிலா திரைப்படத்தின் மூலம், ஒரு இயக்குனராக தன்னுடைய முதல் வெற்றியை பதிவு செய்தவர் இயக்குனர் நெல்சன் திலீப்குமார்.
'பிளாக் காமெடி க்ரைம்' பாணியில் உருவான இந்த திரைப்படம், 2018 ஆம் ஆண்டு வெளியானது. நயன்தாரா கதையின் நாயகியாக நடித்திருந்த இந்த திரைப்படம், வெறும் ரூ.8 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு ரூ.73 கோடி வசூலை அள்ளியது. மேலும் நயன்தாராவுக்கு சிறந்த நடிகைக்கான விருதையும் பெற்று தந்தது.
அதே போல் யோகி பாபுவின் காமெடி, சரண்யா பொன்வண்ணனின் எதார்த்தமான நடிப்பு போன்றவை இந்த படத்திற்கு பலமாக அமைந்தது. மேலும் இந்த படத்தை 'குட்லக் ஜெர்ரி' என்கிற பெயரில் ஹிந்தியிலும் ரீமேக் செய்தனர். இந்த படத்தை சித்தார்த் சென் என்கிற அறிமுக இயக்குனர் இயக்கிய நிலையில், நயன்தாரா கதாபாத்திரத்தில் ஜான்வி கபூர் நடித்திருந்தார். ஹிந்தியிலும் வசூலை வாரி குவித்தது 'கோலமாவு கோகிலா' ரீமேக்.
இந்த படத்தை தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து 'டாக்டர்' திரைப்படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்கினார். இந்த படத்தில் பிரியங்கா மோகன் ஹீரோயினாக நடிக்க, வினய் ராய் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
49 வயதில் அஜித் பட ஹீரோயினுக்கு பிரபல நடிகருடன் நடந்த இரண்டாவது திருமணம்!
கொரோனா பிரச்சனை காரணமாக, இந்த திரைப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போன நிலையில்... இப்படம் பாக்ஸ் ஆபிஸில் சிவகார்த்திகேயனுக்கு ரூ.100 கோடி வசூலை பெற்றுத்தந்த முதல் படமாக மாறியது.
இந்த படத்திற்கு பின்னர் தளபதி விஜய்யுடன் பீஸ்ட் படத்தில் கை கோர்த்தார் தளபதி விஜய். ஆனால் இந்த படம் சரியாக போகாதுதால் தன்னுடைய முதல் தோல்வியை சந்திக்கும் சூழலுக்கு ஆளானார்.
13 வயதிலேயே நடிப்பில் அம்மா ஐஸ்வர்யாவுக்கே டஃப் கொடுக்கும் மகள்! பள்ளி நாடகத்தில் அசத்திய ஆராத்யா!
இதன் பின்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து, ஜெயிலர் படத்தை இயக்கினார். இந்த திரைப்படம் உலக அளவில் சுமார் ரூ. 650 கோடிக்கு மேல் வசூல் செய்தது. தலைவருக்கு தரமான வெற்றியை கொடுத்ததால் ரஜினி ரசிகர்களால் கொண்டாடப்படும் இயக்குனராக மாறியுள்ளார். கூடிய விரைவில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது. அதற்காக இப்போதே தங்களின் எதிர்பார்ப்பை ரசிகர்கள் வெளிப்படுத்தி வருகிறார்கள்.
இயக்குனர் என்பதை தாண்டி, தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்த நெல்சன் திலீப் குமார் இந்த ஆண்டு கவினை ஹீரோவாக வைத்து தயாரித்திருந்த திரைப்படம் தான் பிளடி பெக்கர். ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம், குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வெறும் 11 கோடி மட்டுமே வசூல் செய்து தோல்வியை சந்தித்தது.
கேப்டன்சி டாஸ்கில் நடந்த விதிமீறல்! 13 போட்டியாளராகளுக்கும் ஆப்பு; கதறிய முத்துக்குமரன்!
நெல்சன் திலீப்குமார் பற்றி தெரிந்த பலருக்கும், அவருடைய குடும்பத்தினர் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நெல்சன் திலிப் குமார் விஜய் டிவியில் பணியாற்றும்போது மோனிஷா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆத்விக் என்கிற மகன் ஒருவரும் உள்ளார்.
நெல்சன் திலீப் குமாரின் மனைவி விஜய் டிவி டிடி உள்ளிட்ட பல பிரபலங்களுக்கு மிகவும் நெருக்கமானார். அதேபோல் ஃபேஷன் மீது அதிக ஆர்வம் கொண்ட இவர், அடிக்கடி விதவிதமான போட்டோஸ் எடுத்து அதனை சமூக வலைதளத்தில் வெளியிட்டு வருகிறார். திரையில் முகம் காட்டாவிட்டாலும் instagram பக்கத்தில் படு ஆக்டிவாக இருக்கும் மோனிஷாவை instagram தளத்தில் 71.6K பாலோவர்ஸ் பின் தொடர்கின்றனர். இந்நிலையில் மோனிஷாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.