49 வயதில் அஜித் பட ஹீரோயினுக்கு பிரபல நடிகருடன் நடந்த இரண்டாவது திருமணம்!

First Published | Dec 20, 2024, 5:00 PM IST

அஜித் நடிப்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு, பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வெளியான 'ரெட் ' திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்த பிரியா கில் தான் தன்னுடைய 49 வயதில் இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார்.
 

Ajith Movie Heroine Weds Web Series Actor

மாடலும், நடிக்கையுமான பிரியா கில் பஞ்சாப்பை சேர்ந்தவர். 1995-ஆம் ஆண்டின் பெமினா மிஸ் இந்தியா இன்டர்நேஷனல் அழகி பட்டத்தை வென்ற இவர், இதை தொடர்ந்து ஹிந்தியில் 1996-ஆம் ஆண்டு அறிமுகமானார். இவர் நடிப்பில் வெளியான Tere Mere Sapne திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து பாலிவுட் திரையுலகின் பிசி நடிகையாக மாறினார் பிரியா கில்.

Priya Gill Acting Bollywood and South Indian Languages

இந்தியை தொடர்ந்து, தமிழ், தெலுங்கு, மலையாளம், போஜ்புரி, பஞ்சாபி போன்ற மொழி படங்களிலும் நடித்தார். குறிப்பாக தமிழில் இவர் தல அஜித்துக்கு ஜோடியாக 'ரெட்' திரைப்படத்தில் நடித்திருந்தார். சிங்கம் புலி இயக்கிய இந்த படத்தை, எஸ் எஸ் சக்கரவர்த்தி தயாரித்திருந்தார். இந்த படத்தில் மணிவண்ணன், ரகுவரன், சலீம் கோஸ், ரேவதி, கவிதா, காந்திமதி, இளவரசு, நிழல்கள் ரவி, உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் நடித்திருந்தனர்.

13 வயதிலேயே நடிப்பில் அம்மா ஐஸ்வர்யாவுக்கே டஃப் கொடுக்கும் மகள்! பள்ளி நாடகத்தில் அசத்திய ஆராத்யா!

Tap to resize

Red Movie Heroine Priya Gill

இந்த திரைப்படம் வெற்றிபெற தவறியதால், பிரியா கில்லுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. இந்த ஒரே படத்தில் மட்டுமே நடித்தார். மேலும் முன்னணி நடிகையாக இருக்கும் போதே தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்ட இவர், திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்தார். சில படங்களில் நடிகர்களுடன் நெருக்கமான காட்சிகளில் நடித்ததால், இவருக்கும் இவருடைய கணவருக்கும் இடையே பிரச்சனை வெடித்ததாக கூறப்படுகிறது.

Priya Gill Divorce First Husband

எனவே 2006-ஆம் ஆண்டு முழுமையாக திரையுலகில் இருந்து விலகிய பிரியா கில், சில வருடத்திலேயே தன்னுடைய கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்தார். அவ்வப்போது மீடியாக்களில் தலைகாட்டி வரும் பிரியா கில், தன்னுடைய 49 வயதிலும் இளமை மாறாத, ஒல்லிக்குச்சி உடம்புகாரியாக தான் உள்ளார். 

கேப்டன்சி டாஸ்கில் நடந்த விதிமீறல்! 13 போட்டியாளராகளுக்கும் ஆப்பு; கதறிய முத்துக்குமரன்!

Priya Gill and Ravi Shankar Second Marriage

இந்நிலையில் அண்மையில் கொடுத்த பேட்டி ஒன்றில், 'தாம்' வெப் தொடர் நடிகர் ரவி சேகரை காதலித்து ரகசியமாக இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார். பிரியா கில்லுக்கு ஏற்கனவே மகள் ஒருவர் உள்ள நிலையில் ரவி சேகருக்கு மகள் உள்ளார். இந்த தகவல் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Latest Videos

click me!