ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சனின் மகள் ஆதாரத்யா பச்சன், மும்பையில் முகேஷ் அம்பானி நடத்தி வரும், திருபாய் அம்பானி சர்வதேச பள்ளியில் படித்து வருகிறார். இந்த பள்ளியில் கிருஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, சிறப்பு நடனம், நாடகம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் மாணவர்களுக்கு இடையே நடத்தப்பட்டது. இதில் மாணவர்கள் பலர் தங்களுடைய திறமையை வெளிப்படுத்தும் விதத்தில், கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர்.
25
Aaradhya School Stage Performance
இதில் ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சனின் மகள் ஆராத்யா, நாடகம் ஒன்றில் கலந்து கொண்டு தன்னுடைய நடிப்பு திறமையை வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்த புகைப்பங்கள் வெளியாகி உள்ளது. மேலும் ஐஸ்வர்யா ராய், அபிதாப் பச்சன், அபிஷேக் பச்சன் உள்ளிட்ட பலர் இந்த பள்ளி விழாவில் ஆராத்யாவின் அசத்தலான நடிப்பை பார்த்து ரசித்துள்ளனர்.
ஆராத்தியாவுடன் இந்த நாடகத்தில், ஷாருக்கானின் இளைய மகன் ஆப்ராம் கான் மற்றும் இன்னும் சில மாணவர்கள் நடித்துள்ளனர். அதே போல் ஆப்ராம் தன்னுடைய நடன திறமையை வெளிப்படுத்த, இதனை கௌரி கான், ஷாருக்கான் ஆகியோர் பள்ளி விழாவில் கலந்து கொண்டு பெற்றோர் வரிசையில் அமர்ந்து ரசித்துள்ளனர். இதுகுறித்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
45
Shah rukh khan son Abiram Performance
இந்த நிகழ்ச்சி கிருஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கொண்டாடப்பட்டுள்ளது என்பதால், ஆராத்யா சிவப்பு மற்றும் வெள்ளை நிறம் கொண்ட கிருஸ்துமஸ் செலபிரஷன் உடையை அணிந்திருந்தார். ஆப்ராம் கானும் வெள்ளை நிறத்தில் ஆடையை அணிந்திருந்தார். ஆங்கில நாடகமான இதில், நடிகர்களான அம்மா ஐஸ்வர்யா ராய் மற்றும் அப்பா அபிஷேக் பச்சனை பெருமை கொள்ளும் விதத்தில் தன்னுடைய 13 வயதிலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் ஆராத்யா என கூறப்படுகிறது.
திருபாய் அம்பானி இன்டர்நேஷனல் பள்ளியில் நடந்த விழா குறித்து தான் தற்போது பாலிவுட் மீடியாக்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. அதே போல் விவாகரத்து வதந்திக்கு புற்று புள்ளி வைக்கும் விதத்தில், இந்த பள்ளி விழாவில், அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் இருவரும் ஒன்றாக கலந்து கொண்டதோடு, மகளையும் ஒரே காரில் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.