Maharaja beats Baahubali 2 : சீனாவில் சக்கைப்போடு போட்டு வரும் விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்படம் பாகுபலி 2 படத்தின் லைஃப் டைம் வசூலை முறியடித்துள்ளது.
நடிகர் விஜய் சேதுபதியின் 50வது படம் மகாராஜா. இப்படத்தை குரங்கு பொம்மை படத்தின் இயக்குனர் நிதிலன் இயக்கி இருந்தார். இப்படத்தில் விஜய் சேதுபதி உடன் நட்டி நட்ராஜ், அபிராமி, அனுராக் கஷ்யப், பிக் பாஸ் சாச்சனா, திவ்ய பாரதி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. இப்படம் கடந்த ஜூன் மாதம் இந்தியாவில் ரிலீஸ் ஆனது. வெளியான பின் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பை பெற்றது.
24
Maharaja in China
குறிப்பாக இந்தியளவில் பாக்ஸ் ஆபிஸில் சக்கைப்போடு போட்ட இப்படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து மாஸ் காட்டியது. இதையடுத்து ஓடிடியில் வெளியான பின்னர் இப்படத்திற்கு வெளிநாட்டில் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்து வந்தது. இதனால் மகாராஜா படத்தை மற்ற நாடுகளிலும் ரிலீஸ் செய்ய முடிவெடுத்த படக்குழு முதற்கட்டமாக சீனாவில் மொழிபெயர்ப்பு செய்து ரிலீஸ் செய்துள்ளது. கடந்த நவம்பர் 29-ந் தேதி இப்படம் சீனாவில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆனது.
மகாராஜா படம் சீனாவில் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைகளில் ரிலீஸ் ஆகி உள்ளதால் இப்படத்திற்கு சீனா மக்களிடையே நல்ல வரவேற்பும் கிடைத்து வருகிறது. இப்படம் சீனாவில் இதுவரை 76.50 கோடி வசூலித்துள்ளது. இப்படம் அங்கு மட்டும் ரூ.100 கோடி வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவில் அதிக வசூல் செய்த தமிழ் படமாக ரஜினிகாந்தின் எந்திரன் 2 இருந்த நிலையில், அந்த சாதனையை மூன்று நாட்களில் மகாராஜா முறியடித்தது.
44
Vijay Sethupathi's Maharaja china collection report
இந்நிலையில், தற்போது சீனாவில் பாகுபலி 2 படத்தின் லைஃப் டைம் வசூல் சாதனையையும் மகாராஜா முறியடித்து உள்ளது. பாகுபலி 2 திரைப்படம் சீனாவில் ஒட்டுமொத்தமாக ரூ.64 கோடி வசூலித்திருந்த நிலையில், அதை 21 நாட்களில் மகாராஜா படம் முறியடித்து வெற்றிநடைபோட்டு வருகிறது. சீனாவில் மகாராஜா படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து அப்படத்தை ஜப்பானிலும் மொழிபெயர்ப்பு செய்து ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.