அட்ரா சக்க; 'விடாமுயற்சி' படத்தில் இணைந்த விஜய் டிவி பிரபலம்! அஜித்துடன் வெளியிட்ட வேற லெவெல் போட்டோ!

First Published | Dec 20, 2024, 6:45 PM IST

அஜித்தின் விடாமுயற்சி திரைப்படத்தில், விஜய் டிவி தொகுப்பாளினி ரம்யா இணைந்துள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது.
 

Vidaamuyarchi Movie Update:

அஜித் நடிப்பில் உருவாகி வரும் 'விடாமுயற்சி' திரைப்படம் தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு, தற்போது தாய்லாந்தில் நடந்து வரும் நிலையில், இப்படத்தில் விஜய் டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் பிரபலமான விஜே ரம்யா இணைந்துள்ளார். மேலும் அஜித்துடன் இவர் எடுத்து கொண்ட புகைப்படம் ஒன்றும் வைரலாகி வருகிறது.

Ajith and Trisha Starring Vidaamuyarchi

அஜித்தின் 62 வது திரைப்படமாக உருவாகும் 'விடாமுயற்சி' படத்தின் படப்பிடிப்பு, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் துவங்கிய நிலையில், ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட பின்னரும் படப்பிடிப்பு முடியாமல் உள்ளது. அண்மையில் தான், அஜித், த்ரிஷா, இயக்குனர் மகிழ் திருமேனி ஆகியோர் தாய்லாந்தில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வருவதாக அறிவித்தனர். அஜித் மிகவும் இளமையான லுக்கிலும் , த்ரிஷா ட்ரான்ஸ்பரென்ட் சேலையிலும் கைபிடித்து நடந்து வந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் தாறுமாறாக வைரல் ஆனது.

49 வயதில் அஜித் பட ஹீரோயினுக்கு பிரபல நடிகருடன் நடந்த இரண்டாவது திருமணம்!

Tap to resize

Vidaamuyarchi Last Schedule

மேலும் இப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு ஒரு புறம் பரபரப்பாக நடந்து வந்தாலும், இன்னொரு புறம்  இப்படத்தை பொங்கலுக்கு வெளியிடும் கட்டாயத்தில் படக்குழு உள்ளதால் போஸ்ட் புரோடக்ஷன் பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது. லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு, அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் ஆக்சன் கிங் அர்ஜுன், நடிகை ரெஜினா, பிக்பாஸ் ஆரவ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.

Vj Ramya Join Vidaamuyarchi:

இந்நிலையில் இந்த படத்தில், பிரபல விஜய் டிவி பிரபலமும், நடிகையுமான, ரம்யா இணைந்துள்ளார். இதனை அறிவிக்கும் விதமாக, அஜித்துடன் இருக்கும் புகைப்படத்தை ரம்யா வெளியிட, அது வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் அஜித் பட்டு வேஷ்டி சட்டையில் சும்மா மாப்பிள்ளை போல் கெத்தாக இருக்க,  ரம்யாவும் பட்டுப் புடவையில் உள்ளார். அஜித் நடிக்கும் இந்த படம் ஹாலிவுட் படமான பிரேக் டவுன் படத்தின், ரீமேக்காக எடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

13 வயதிலேயே நடிப்பில் அம்மா ஐஸ்வர்யாவுக்கே டஃப் கொடுக்கும் மகள்! பள்ளி நாடகத்தில் அசத்திய ஆராத்யா!

Latest Videos

click me!