ஜெயிலர் 2 ரிலீஸ் தேதி இதுதான்... படக்குழு பொத்தி பொத்தி பாதுகாத்த அப்டேட்டை பொட்டுனு போட்டுடைத்த ரஜினி..!

Published : Sep 24, 2025, 03:27 PM IST

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் நடித்து வரும் ஜெயிலர் 2 திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை ரஜினிகாந்த் திடீரென அறிவித்து படக்குழுவுக்கே அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

PREV
14
Jailer 2 Release Date

தமிழ் சினிமாவின் மிகப்பெரிய வெற்றி படங்களில் ஜெயிலர் படமும் ஒன்று. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் டைகர் முத்துவேல் பாண்டியன் என்கிற போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்த இப்படம், கடந்த 2023-ம் ஆண்டு ரிலீஸ் ஆகி உலகளவில் பாக்ஸ் ஆபிஸில் 650 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து இருந்தார். இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, விநாயகன், தமன்னா, சிவ ராஜ்குமார், சுனில், ரெடின் கிங்ஸ்லி, யோகிபாபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது.

24
ஜெயிலர் 2

ஜெயிலர் 2 படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் உருவாகும் அறிவிக்கப்பட்டது. ஒரு ப்ரோமோ வீடியோவுடன் கடந்த ஜனவரி 14ந் தேதி பொங்கல் பண்டிகையன்று ஜெயிலர் இரண்டாம் பாகத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இந்த ப்ரோமோவில் ரஜினிகாந்துடன் நெல்சன் மற்றும் அனிருத்தும் நடித்திருந்தனர். ஜெயிலர் முதல் பாகத்தில் நடித்த மோகன்லால், சிவராஜ் குமார் ஆகியோர் இரண்டாம் பாகத்திலும் கேமியோ ரோலில் நடிக்க உள்ளனர். இவர்களுடன் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா, மலையாள நடிகர் பகத் பாசில் ஆகியோரும் இணைந்திருக்கிறார்கள்.

34
விறுவிறுப்பாக நடைபெறும் ஜெயிலர் 2 ஷூட்டிங்

தமிழ் சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக ஜெயிலர் 2வும் உள்ளது. ஜெயிலர் முதல் பாகத்திற்கு இசையமைத்த அனிருத் ரவிச்சந்தர் தான் இரண்டாம் பாகத்திற்கும் இசையமைக்கிறார். முதல் பாகத்தைப் போலவே இரண்டாம் பாகமும் ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்ததாக இருக்கும் என கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் ஷூட்டிங் தற்போது கேரள மாநிலம் பாலக்காட்டில் நடைபெற்று வருகிறது. அங்கு ரஜினிகாந்த் நடிக்கும் காட்சிகளை படமாக்கி வருகிறார் நெல்சன். கேரளாவிற்கு ஷூட்டிங் சென்ற ரஜினிக்கு அங்குள்ள ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

44
ஜெயிலர் 2 ரிலீஸ் தேதி

இந்த நிலையில், இன்று விமான நிலையம் வந்த ரஜினிகாந்திடம் ஜெயிலர் 2 படம் எப்போது ரிலீஸ் ஆகும் என கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு அவர் 2026-ம் ஆண்டு ஜூன் மாதம் 12ந் தேதி ஜெயிலர் 2 படம் ரிலீஸ் ஆகும் என கூறிவிட்டு சென்றார். படத்தின் ஷூட்டிங்கே இன்னும் முடிவடையாத நிலையில், ரஜினிகாந்த் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்திருப்பது படக்குழுவுக்கே சர்ப்ரைஸ் ஆக இருக்கும் என கருதப்படுகிறது. இதற்கு முன் ரஜினி நடித்த உழைப்பாளி, சிவாஜி தி பாஸ், காலா ஆகிய படங்கள் ஜூன் மாதம் ரிலீஸ் ஆகி இருக்கின்றன. அந்த பட்டியலில் ஜெயிலர் 2 படமும் இணைந்துள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories