பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி வருகிற அக்டோபர் 5-ம் தேதி தொடங்க உள்ளது. இந்நிகழ்ச்சியில் புதிதாக பல ரூல்ஸ் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாம், அதைப்பற்றி பார்க்கலாம்.
பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 9-வது சீசன் அதகளமாக ஆரம்பமாக உள்ளது. 8-வது சீசனை தொகுத்து வழங்கிய மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தான் பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்க உள்ளார். இந்நிகழ்ச்சி வருகிற அக்டோபர் 5-ந் தேதி கோலாகலமாக தொடங்க உள்ளது. இதில் கலந்துகொள்ள உள்ள போட்டியாளர்கள் யார்... யார் என்பதை சீக்ரெட்டாகவே வைத்திருக்கிறார்கள். வழக்கம்போல் இந்த சீசனிலும் பல்வேறு புதுமைகள் காத்திருக்கின்றன. அதில் ஒரு பகுதியாக நிகழ்ச்சி மீதான விறுவிறுப்பை கூட்டும் விதமாக புத்தம் புது ரூல்ஸ் இந்த சீசனில் அறிமுகப்படுத்தப்பட வாய்ப்பு உள்ளதாம்.
25
மாஸ் எலிமினேஷன்
அதில் ஒன்று தான் மாஸ் எலிமினேஷன். வழக்கமாக வாரந்தோறும் போட்டியாளர்கள் நாமினேட் செய்பவர்களில், மக்கள் மத்தியில் குறைவான வாக்குகளை வாங்கும் போட்டியாளர்கள் வெளியேற்றப்படுவார்கள். சில நேரங்களில் டபுள் எலிமினேஷனும் நடக்கும். ஆனால் இந்த பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் மாஸ் எலிமினேஷன் நடக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மாஸ் எலிமினேஷன் மூலம் ஒரே நேரத்தில் மூன்று, நான்கு போட்டியாளர்கள் கூண்டோடு எலிமினேட் செய்யப்பட வாய்ப்பு இருக்கிறதாம். இதனால் போட்டியாளர்கள் யாரும் சேஃப் ஜோனில் இருக்க முடியாது என கூறப்படுகிறது.
35
லைவ் ஓட்டிங்
அதேபோல் லைவ் ஓட்டிங் முறையும் இந்த சீசனில் அறிமுகமாக வாய்ப்பு இருக்கிறது. வழக்கமாக ஆன்லைன் ஓட்டிங் நடைபெறும். ஆனால் இந்த முறை ஆடியன்ஸுக்கும் நிகழ்ச்சிக்கும் இடையேயான கனெக்ஷனை இன்னும் அதிகரிக்கும் விதமாக, பிக் பாஸ் வீட்டில் நடத்தப்படும் டாஸ்க்கில் ஆடியன்ஸ் தங்களுக்கு பிடித்த நபருக்கு வாக்கு செலுத்தலாம். இறுதியில் யாருக்கு அதிக வாக்கு கிடைத்திருக்கிறதோ அந்த நபருக்கு டாஸ்கில் அட்வாண்டேஜ் வழங்கப்படுமாம். இந்த லைவ் ஓட்டிங் முறையின் மூலம் போட்டியாளர்களும் ஆடியன்ஸின் மனதை புரிந்துகொள்ள வாய்ப்பு இருக்கிறது.
பிக் பாஸ் தமிழ் வரலாற்றில் சீக்ரெட் ரூமில் வைக்கப்பட்ட போட்டியாளர்கள் வெகு சிலர் தான். குறிப்பாக முதல் சீசனில் சுஜா வருணி, மூன்றாவது சீசனில் சேரன், 8-வது சீசனில் சாச்சனா ஆகியோர் சீக்ரெட் ரூமில் இருந்து மீண்டும் வீட்டுக்குள் வந்தனர். அந்த வகையில் இந்த 9-வது சீசனிலும் மாஸ் எலிமினேஷன் நடைபெற இருப்பதால் அதில் சிலர் சீக்ரெட் ரூமில் வைக்கப்பட்டு மீண்டும் வீட்டுக்குள் அனுப்பப்படவும் வாய்ப்பு இருக்கிறது. இந்த சீக்ரெட் ரூமால் ஆட்டம் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
55
டிவி மற்றும் ஓடிடியிலும் ட்விஸ்ட்
பார்வையாளர்களை பிக் பாஸ் நிகழ்ச்சியோடு நெருக்கமாக்க இந்த முறை புது யுக்தியை பாலோ பண்ண உள்ளார்களாம். டிவியில் வழக்கமான எபிசோடுகள் தினந்தோறும் ஒளிபரப்பாகும். அதே நேரத்தில் ஓடிடியிலும் பார்வையாளர்களை கொண்டு வர சில எக்ஸ்குளூசிவ் ஆன டாஸ்க் மற்றும் அன்கட் வெர்ஷன், 24 மணிநேர லைவ் என அனைத்திலும் புது யுக்தியை பாலோ பண்ண உள்ளார்களாம்.