எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் தர்ஷனை மண்டபத்தில் இருந்து கடத்தி வெளியே கொண்டு வருமாறு ஜீவானந்தம் சக்தியிடம் கூறி உள்ளார். இதையடுத்து என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஆதி குணசேகரன் அனுப்பிய ஆட்கள் ஜீவானந்தம் இருக்கும் ஏரியாவை சுத்துப்போட்ட நிலையில், அங்கிருந்து வெளியேற முடியாமல் அவர்கள் மூவரும் சிக்கிக் கொள்கிறார்கள். மறுபுறம் அறிவுக்கரசிக்கு தன்னிடம் இருக்கும் வீடியோ ஆதாரத்தை காட்டி கேமராமேன் மிரட்டுகிறான். அதேபோல் புர்கா அணிந்திருக்கும் பெண் நந்தினி தானா என்பதை அறிந்துகொள்ள கதிர் அவரை மிரட்டிய நிலையில், வேறு ஒரு பெண்ணுக்கு புர்கா போட்டுவிட்டு எஸ்கேப் ஆகிவிடுகிறார் நந்தினி. இப்படி ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் உடன் சென்றுகொண்டிருக்கும் இந்த சீரியலில் இன்று என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
24
தர்ஷனை கடத்த சொல்லும் ஜீவானந்தம்
சக்திக்கு போன் போட்டு பேசும் ஜனனி, நாங்க அங்க வர்றத்துக்கு தாமதம் ஆச்சுனா, யாருக்கும் தெரியாமல் தர்ஷனை அங்கிருந்து கடத்தி வெளியே கூட்டிட்டு வந்துவிடுமாறு கூறுகிறார். ஜீவானந்தம் மற்றும் ஜனனியின் இந்த பிளானை ரேணுகா, நந்தினியிடம் வந்து கூறுகிறார். எப்படி தர்ஷனை கூட்டிட்டு வெளியே போவது என பதற்றம் அடையும் நந்தினி, முல்லையை வைத்து தர்ஷனை வெளியே கொண்டு வர பிளான் போடுகிறார். புர்கா அணிந்திருப்பது நந்தினி என தெரியாமல் முல்லை அவர் மீது காதல் கொண்டதை அறிந்த சக்தி, அவர் என்ன சொன்னாலும் முல்லை கேட்பான் என்பதால், அவனை வைத்து காய் நகர்த்த முடிவெடுக்கிறார்.
34
வீடியோவை வெளியிட சொல்லும் குணசேகரன்
அந்த வகையில் முல்லையிடம் தனியாக பேசும் நந்தினி, தர்ஷன் டயர்டு ஆக இருப்பதால் அவனை மாடிக்கு அழைத்து வருமாறு கூறுகிறார். உடனே முல்லையும் நான் அவனை கூட்டிட்டு வர்றேன் என சொல்லுகிறார். மறுபுறம் கேமராமேன் தன்னிடம் இருக்கும் வீடியோவை வெளியே விடுவதாக அறிவுக்கரசியை மிரட்டிய நிலையில், இந்த விவகாரத்தை ஆதி குணசேகரனிடம் கொண்டு செல்கிறார் அறிவுக்கரசி. அப்போது காசெல்லாம் தர முடியாது முடிஞ்சா வீடியோவை வெளிய விடு என சவால் விடுகிறார் குணசேகரன். அதற்கு அந்த கேமராமேன், சார் சொல்ற மாதிரி வீடியோவை லீக் பண்ணிடலாமா என அறிவுக்கரசியை கேட்கிறார். இதைக்கேட்டு அறிவு வெடவெடத்துப் போகிறார்.
ஜீவானந்தம், பார்கவி மற்றும் ஜனனி ரெளடிகளிடம் இருந்து தப்பித்து வந்தார்களா? கேமராமேன் ஆதி குணசேகரன் ஈஸ்வரியை தாக்கிய வீடியோவை வெளியிட்டாரா? நந்தினி தர்ஷனை நைஸாக அழைத்து வந்து மண்டபத்தில் இருந்து எஸ்கேப் ஆனாரா? தர்ஷனுக்கு கல்யாணம் நடக்கப்போவது அன்புக்கரசி உடனா இல்லை பார்கவி உடனா? ஆதி குணசேகரன் அனுப்பிய ஆட்கள் ஜீவானந்தம் உள்பட மூவரையும் கொன்றார்களா? என அடுக்கடுக்கான கேள்விகளுக்கு இனி வரும் எபிசோடுகளில் தான் பதில் கிடைக்கும். அதனால் இனி கல்யாண வீடு கலவர பூமியாக மாறப்போவது மட்டும் உறுதி.