சிறகடிக்க ஆசை சீரியலில் ஏற்கனவே பூ வியாபாரம் செய்து வரும் மீனா, தற்போது புது பிசினஸ் ஒன்றை தொடங்கி இருக்கிறார். அது என்ன பிசினஸ் என்பதை பற்றி பார்க்கலாம்.
சிறகடிக்க ஆசை சீரியலில் முத்து தன்னுடைய நண்பர்களிடம் பேசும்போது, இனி தான் ஸ்கூல் சவாரியும் எடுக்க உள்ளதாக கூறுகிறார். அதன்மூலம் நிரந்தரமாக வருமானம் வரும் அதுமட்டுமின்றி வீட்டின் மாடியில் தனக்கும் மீனாவுக்கும் ரூம் கட்ட வேண்டும். அதற்காக காசு சேர்க்க வேண்டும் என்பதற்காக இதுபோன்ற ஒரு முடிவை எடுத்திருப்பதாக கூறுகிறார். அப்போது அங்கு வரும் மீனாவின் தம்பி, பேரிச்சம்பழம் கொண்டு வந்து கொடுக்கிறார். கிரீஷுக்கு ரொம்ப பிடிக்கும் என்பதால், அதை கிரீஷிடம் கொடுக்க முடிவெடுக்கும் முத்து, மீனாவையும் அழைத்துக் கொண்டு மகேஸ்வரி வீட்டிற்கு கிளம்புகிறார்.
24
கிரீஷை பார்க்க சென்ற முத்து
மகேஸ்வரி வீட்டில் கிரீஷை பார்க்க ரோகிணி ஸ்நாக்ஸ் வாங்கி வந்திருக்க, அந்த சமயத்தில் காலிங் பெல் அடிக்கிறது. யார் என்று லட்சுமி திறந்து பார்க்கும் போது முத்துவும் மீனாவும் வெளியே நிற்கிறார்கள். உடனே ரோகிணி உள்ளே சென்று ஒளிந்துகொள்கிறார். பின்னர் முத்துவும் மீனாவும் உள்ளே வந்து கிரீஷுக்கு பேரிச்சம்பழத்தை கொடுக்கிறார்கள். அதைப்பார்த்த கிரீஷ் செம குஷியாகி, முத்து உடன் விளையாடி வருகிறார். அவர்களை வெளியே அனுப்ப வேண்டும் என்பதற்காக ரோகிணியின் அம்மா தாங்கள் கோவிலுக்கு செல்ல இருப்பதாக கூறிக் கொண்டே இருக்கிறார். இதனை புரிந்துகொண்ட மீனா முத்துவை அங்கிருந்து அழைத்து செல்கிறார்.
34
மீனாவின் புது பிசினஸ்
மீனா ஒரு இடத்துக்கு பூ டெலிவெரி செய்ய செல்லும் போது, ஒருநபர் பூக்களை குப்பை தொட்டியில் கொட்டுவதை பார்க்கிறார். அப்போது ஏன் இப்படி கொட்றீங்க என கேட்கையில், அவர் எவ்வளவு அழகாக இருந்தாலும் பூக்களுக்கு ஒரு நாள் தான் மவுசு என சொல்கிறார். இதனால் அதிரடி முடிவெடுக்கும் மீனா, இனி பூக்களை வைத்து பொக்கே கொடுப்பதற்கு பதில் பழம் வைத்து கொடுத்தால் அது பயனுள்ளதாக இருக்கும் என கருதி, பழங்களுடன் கூடிய ஒரு அழகான பொக்கேவை தயார் செய்கிறார் மீனா. அதை முத்துவிடம் கொண்டு வந்து காட்ட, அவரும் அதனைப் பார்த்து மீனாவை பாராட்டுவது மட்டுமின்றி வீட்டில் உள்ள அனைவரிடமும் காட்டுகிறார்.
அண்ணாமலை, ஸ்ருதி, ரவி ஆகியோரும் மீனாவின் இந்த புது ஐடியாவுக்கு ஆதரவு கொடுக்கிறார்கள். வழக்கம் போல் மனோஜ் மட்டம் தட்டுகிறார். ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாத முத்து, மீனாவுக்கு சப்போர்ட் பண்ணி பேசுகிறார். மறுநாள் விஜயா டாக்டர் பட்டம் வாங்க இருக்கும் விஷயம் முத்துவுக்கு தெரியவருகிறது. விஜயா இதற்காக இரத்த தான முகாம் ஏற்பாடு செய்திருந்த நிலையில், அங்கு செல்லும் முத்துவுக்கு அவர் இதுவரை என்னவெல்லாம் தில்லுமுல்லு வேலைகள் செய்தார் என்கிற உண்மை தெரியவருகிறது. அதன்பின் என்ன நடக்கப்போகிறது என்பதை இனி வரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.