எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஆதி குணசேகரன் ஈஸ்வரியை தாக்கிய வீடியோவை காட்டி அறிவுக்கரசி பிளாக்மெயில் செய்யப்படுகிறார். அதன் பின் என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.
சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் குணசேகரன் அனுப்பிய ரெளடிகளால் பெரியகுளத்தில் இருந்து வெளியேற முடியாமல் ஜனனி, ஜீவானந்தம் மற்றும் பார்கவி ஆகியோர் திக்குமுக்காடி இருக்கிறார்கள். விடிந்தால் தர்ஷனுக்கு கல்யாணம் நடைபெற இருப்பதால், காலையில் மண்டபத்திற்கு ரீச் ஆக முடியாவிட்டால், தர்ஷனை மண்டபத்தை வெளியே அழைத்து வர பிளான் போடுகிறார்கள். மறுபுறம் ஆதி குணசேகரன், மண்டபத்தில் பதற்றத்துடன் அமர்ந்திருக்க, ஞானம் அவரிடம் அதான் ஆள் அனுப்பிட்டீங்கள்ல ஏன் கவலையா இருக்கீங்க என கேட்கிறார். அவனுங்க இறங்கி காரியத்தை முடிச்சிட்டாங்கங்கிற செய்தி வரனும் இதுதான் முக்கியம் என சொல்கிறார் குணசேகரன்.
24
அறிவுக்கரசிக்கு ஆப்பு
கல்யாண மண்டபத்தில் ஜாலியாக இருக்கும் அறிவுக்கரசிக்கு செம ட்விஸ்ட் ஒன்று காத்திருக்கிறது. கல்யாணத்தில் வீடியோ எடுக்க வந்த கரிகாலனின் நண்பன், அறிவுக்கரசியிடம் அக்கா கொஞ்சம் தனியா வாங்க, உங்ககிட்ட தனியா பேசனும் என சொல்லி அழைக்கிறார். அதற்கு அவர், என்கிட்ட நீ தனியா பேசப்போறியா, போடா லூசுப்பயலே என திட்டுகிறார். அப்போது தான் உண்மையை சொல்கிறார் அந்த நபர், உங்க போனில் இருந்து குணசேகரன் சார் வீடியோவை தூக்கியாச்சு என சொல்கிறார். இதைக்கேட்ட அறிவுக்கரசி செம ஷாக் ஆகிறார். ரூமில் வைத்து குணசேகரன் அவருடைய மனைவியை கொலை செய்ய முயற்சித்தார் அல்லவா அந்த வீடியோ தான் தன்னிடம் இருப்பதாக கூறுகிறார்.
34
வீடியோ காட்டி மிரட்டும் கேமராமேன்
அந்த வீடியோ பற்றி கொஞ்சம் டீடெயிலாக பேச வேண்டும் என சொல்லி அறிவுக்கரசியை அவர் அழைக்கிறார். இதையடுத்து மாடிக்கு செல்லும் அறிவுக்கரசி, ரூமில் உள்ள கேமராமேனை, கழுத்தை நெறித்து, என்னையே மிரட்டுறியா சாவடிச்சிடுவேன், இங்கேயே உனக்கு சமாதி கட்டிருவேன் டா. அன்னைக்கு அந்த போன்ல எதுவும் இல்ல, நொல்லனு சொன்ன, இப்ப என்னடா பேசிட்டு இருக்க என மிரட்டுகிறார். அதற்கு அந்த கேமராமேன், அன்னைக்கு இல்லனு தான் சொன்னேன், ஆனா இப்போ சொல்றேன் அந்த வீடியோ என்கிட்ட தான் இருக்கு, பாக்குறியா என சொல்லி தன் போனில் இருக்கும் அந்த வீடியோவையும் அறிவுக்கரசியிடம் போட்டுக் காட்டுகிறார்.
வீடியோ ஆதாரம் மீண்டும் சீனுக்கு வந்துள்ளதால், அறிவுக்கரசி மிரண்டுபோகிறார். மறுபுறம் காட்டுக்குள் உள்ள மில்லில் சிக்கித் தவிக்கும் ஜனனி, இப்போ எப்படி வெளியே போவது என ஜீவானந்தத்திடம் கேட்க, அவர், காரை எடுத்துக் கொண்டு கிளம்பிவிடலாம்னு ஐடியா கொடுக்கிறார். அடுத்து என்ன நடக்கப்போகிறது? ஜனனி ரெளடிகளிடம் இருந்து தப்பித்தாரா? வீடியோ ஆதாரத்தை காட்டி பிளாக்மெயில் செய்யப்படும் அறிவுக்கரசி, அடுத்து எடுக்கப்போகும் அதிரடி முடிவு என்ன? குணசேகரனின் பிளான் சக்சஸ் ஆனதா? என்பதற்கான விடை இனி வரும் எபிசோடுகளில் தான் கிடைக்கும்.