அம்மாவுக்கே ஆப்பு வைத்த முத்து... பறிபோன விஜயாவின் டாக்டர் பட்டம் - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்

Published : Sep 22, 2025, 09:37 AM IST

சிறகடிக்க ஆசை சீரியலில் டாக்டர் பட்டம் வாங்குவதற்காக நல்லவர் போல் நடித்து வரும் விஜயாவை முத்து வசமாக சிக்க வைத்துள்ளார். அதன்பின் என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.

PREV
14
Siragadikka Aasai Serial Today Episode

சிறகடிக்க ஆசை சீரியலில் முத்துவின் அம்மா விஜயா, டாக்டர் பட்டம் வாங்க வேண்டும் என்பதற்காக தன்னை நல்லவர் போல் காட்டிக் கொள்ள பல்வேறு வேலைகளை பார்த்து வருகிறார். கடந்த வாரமே விஜயா, முத்து கிரீஷை சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு செல்வதில் இருந்து காப்பாற்றியதை தான் செய்ததுபோல், காட்டிக் கொண்டு, தன்னுடைய யோகா கிளாசில் வந்தவர்களிடம் பாராட்டை பெற்றார். இருப்பினும் விஜயா இதுபோன்ற பொய்யான கதையை சொன்னதை மீனா கண்டுபிடித்துவிடுகிறார். பின்னர் முத்துவிடம் வந்து நடந்ததை கூறி, விஜயா எதற்காக இப்படியெல்லாம் செய்கிறார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என சொல்கிறார்.

24
முத்துவுக்கு தெரியவரும் உண்மை

இந்த நிலையில், விஜயா தன்னுடைய யோகா கிளாசில் இரத்த தான முகாம் ஒன்றை நடத்துகிறார். அப்போது அங்கு அவரை பேட்டி எடுக்க வரும் சிலர், உங்களுக்கு எப்படி இதுபோன்ற சமூக சேவை செய்ய தோன்றியது என கேட்கும் போது, இரத்தம் கொடுக்குற எல்லாருமே தாய்க்கு சமம் என பேசுகிறார். அப்போது அங்கு வரும் முத்து, விஜயாவின் தோழியிடம் இருந்து அவர் எதற்காக இதையெல்லாம் செய்கிறார் என்பதை கேட்டு தெரிந்து கொள்கிறார். அதற்கு அவர் சமூக சேவை செய்யுறவங்களுக்கு என்னோட பிரெண்டு கோகிலா டாக்டர் பட்டம் வாங்கி தருவதாக முத்துவிடம் கூறுகிறார்.

34
முத்து காட்டும் வீடியோ

விஜயா டாக்டர் பட்டத்தை ஏமாற்றி வாங்கப் பார்ப்பதை அறியும் முத்து, அதை எப்படியாவது தடுக்க வேண்டும் என திட்டமிடுகிறார். விஜயாவுக்கு டாக்டர் பட்டம் வழங்க வரும் கோகிலா, உங்க சேவைகள் எல்லாம் ரொம்ப நல்லா இருக்கு என பாராட்டிக் கொண்டிருக்கும் போது அங்கு வரும் முத்து, நீங்க தான் என்னோட அம்மாவுக்கு டாக்டர் பட்டம் வாங்குவதற்கு சிபாரிசு செய்வதாக கேள்விப்பட்டேன். ஆனால் அதற்கு முன்னாடி நான் ஒரு வீடியோ காட்டுறேன். அதை பாருங்க என சொல்லி தன்னுடைய போனில் இருக்கும் வீடியோவை காட்டுகிறார் முத்து. அதில் விஜயா தன்னிடம் பிச்சை கேட்க வந்த முதியவரை கட்டையால் அடிக்கும் காட்சி இடம்பெற்று இருக்கிறது.

44
பறிபோகும் விஜயாவின் டாக்டர் பட்டம்

இந்த காட்சியை மீனா தான் போனில் வீடியோ எடுத்திருக்கிறார். இதைப் பார்த்து டென்ஷன் ஆன கோகிலா, என்னையே ஏமாத்துறீங்களா... உங்களை டாக்டர் பட்டத்துக்கு சிபாரிசு செய்திருந்தால் எனக்கு தான் கெட்ட பெயர் வந்திருக்கும் என சொல்லிவிட்டு அங்கிருந்து கோபமாக கிளம்புகிறார். தன்னுடைய டாக்டர் பட்டம் வாங்கும் கனவில் முத்து மண்ணை அள்ளிப் போட்டதால் செம டென்ஷனில் இருக்கிறார் விஜயா. இதையடுத்து என்ன ஆனது என்பதை இனி வரும் எபிசோடில் தான் பார்க்க வேண்டும்.

Read more Photos on
click me!

Recommended Stories