சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனி, ஜீவானந்தம் மற்றும் பார்கவியின் கதையை முடிக்க ஆதி குணசேகரன் புது ரெளடி கும்பலை இறக்கி உள்ளார்.
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜீவானந்தம் மற்றும் பார்கவி உயிரோடு இருக்கும் விஷயம் ஆதி குணசேகரனுக்கு தெரியவந்துள்ளது. அதுமட்டுமின்றி அவர்களை ஜனனி சந்தித்து காப்பாற்ற தயாராகி வருவதையும் அறிந்த குணசேகரன், அவர்கள் இருக்கும் இடத்தை சுற்றி ரெளடிகளை இறக்கி இருக்கிறார். இதனால் தாங்கள் தஞ்சமடைந்து இருக்கும் மில்லை விட்டு வெளியேற முடியாமல் மூவரும் இருக்கிறார்கள். நள்ளிரவில் அங்கிருந்து கிளம்ப ஜனனி பிளான் போட்டிருந்த நிலையில், ரெளடிகளும் அவர்களை நள்ளிரவில் போட்டுத்தள்ள தயாராகி வருகிறார்கள்.
24
ஆதி குணசேகரன் போட்ட உத்தரவு
ஜீவானந்தம், பார்கவி ஆகியோர் உயிரோடு இருக்கும் விஷயத்தை கதிர் மற்றும் ஞானத்திடம் சொல்லும் ஆதி குணசேகரன், இன்றைக்கு ராத்திரியோடு மூன்று பேரின் கதையையும் முடிக்க வேண்டும் என்று தான் ரெளடிகளுக்கு கூறி இருப்பதாக சொல்கிறார். அதுமட்டுமின்றி அவர்கள் உயிரோடு இருக்கும் விஷயத்தை நாம் வெளியில் காட்டிக் கொள்ளக் கூடாது எனவும் தன் தம்பிகளிடம் கூறுகிறார். மறுபுறம் போதையில் இருக்கும் கதிர், இரவு மண்டபத்தில் சாப்பிட மறுக்கும் தர்ஷனை, உட்கார்ந்து சாப்பிடுமாறு வற்புறுத்துகிறார். அன்புக்கரசியும் அருகில் இருந்துகொண்டு, என்ன வேண்டாம் என மிரட்டும் தொனியில் கேட்கிறார். அதற்கு தர்ஷன் எதுவுமே வேண்டாம் என சொல்கிறார்.
34
ஜீவானந்தத்திற்கு வந்த டவுட்
இரவில் ஜனனி, பார்கவி மற்றும் ஜீவானந்தம் ஆகியோர் வெளியே சென்று பார்க்கும்போது, ரெளடிகள் கேட் அருகில் இருப்பதை பார்த்து பதறிப்போகிறார்கள். இதனால் உஷார் ஆன ஜீவானந்தம், ஜனனியிடம் நந்தினிக்கு போன் போட்டு, தர்ஷனை எந்த நேரத்திலும் மண்டபத்தில் இருந்து வெளியே கூட்டிட்டு வருவது போல் ஒரு சூழ்நிலையை உருவாக்கிக் கொள்ளுமாரு சொல்லச் சொல்கிறார். அந்த ரெளடி கும்பல் யதார்த்தமாக அங்கு நிற்கவில்லை. ஒரு குறிவச்சு தான் காத்திருக்கிறார்கள் என கூறுகிறார் ஜீவானந்தம். இதனால் ஜனனியும் பார்கவியும் ஷாக் ஆகிறார்கள்.
விடிந்தால் தர்ஷனுக்கு கல்யாணம், அதற்குள் ரெளடிகளிடம் இருந்து எஸ்கேப் ஆகி பார்கவியையும் தர்ஷனையும் சேர்த்து வைப்பார்களா ஜனனியும் ஜீவானந்தமும்? இல்லையெனில் ஆதி குணசேகரன் அனுப்பிய வீரா குரூப், ஜனனி உள்பட மூவரையும் கொன்றுவிடுவார்களா? மண்டபத்தில் இருந்து தர்ஷனை கடத்தி வரச் சொன்ன ஜீவானந்தத்தின் பிளானை நந்தினி சக்சஸ்ஃபுல் ஆக முடித்தாரா? தர்ஷனுக்கு யாருடன் திருமணம் ஆகப்போகிறது? என்கிற அடுக்கடுக்கான கேள்விகளுக்கு இனி வரும் எபிசோடுகளில் தான் பதில் கிடைக்கும் என்பதால் இனி ஒவ்வொரு எபிசோடும் செம ட்விஸ்ட் காத்திருக்கிறது.